சாவித்திரியாக மாறிய கண்ணம்மா: அட, சினிமாவில் இவங்களே நடித்திருக்கலாம் போல!

Bharathi kannama serial Actress Roshni turns as Actress Savithri Tamil News: பழம்பெரும் நடிகை சாவித்ரி போல முகபாவனைகளோடு தோன்றும் 'பாரதி கண்ணம்மா' நடிகை ரோஷினியின் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகின்றன.

Bharathi kannama serial Actress Roshni turns as Actress Savithri Tamil News: பழம்பெரும் நடிகை சாவித்ரி போல முகபாவனைகளோடு தோன்றும் 'பாரதி கண்ணம்மா' நடிகை ரோஷினியின் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகின்றன.

author-image
WebDesk
New Update
Tamil serial news today: Bharathi kannama serial Actress Roshni turns actress Savithri

Tamil serial news today: சின்னத்திரை பார்வையாளர்கள் இடையே மிகவும் வரவேற்பைப் பெற்ற சீரியலாக 'பாரதி கண்ணம்மா' உள்ளது. இதில் கண்ணம்மாவாக நடிப்பவர் நடிகை ரோஷினி ஹரிபிரியன். இவர் இந்த சீரியலில் சேலை அணிந்து மிகவும் எளிமையான தோற்றத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார்.

Advertisment

கண்ணம்மா எப்போதும் சேலை மட்டும்தான் அணிவாரா? மாடர்ன் உடையெல்லாம் அணிய மாட்டாரா? என்ற ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக மாடர்ன் உடை அணிந்த அழகழகான போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் ஒரு பக்கம் லைக்ஸ் மழை பொழிய, 'ரோஷினி சீரியலில் பார்த்த மாதிரி இல்லை. இந்த போட்டோவில் ஸ்டைலிஷ்ஷாக இருக்கிறார்' என்று கமெண்ட் செய்ய துவங்கினர். மேலும் அந்த போட்டோக்கள் இணையத்திலும் வைரலாகின என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நடிகை ரோஷினி, பழம்பெரும் நடிகை சாவித்ரி போல முகபாவனைகளோடு முன்பு எடுத்துக்கொண்ட சில போட்டோக்களை சமீபத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் அச்சு அசல் சாவித்ரிபோலவே இருக்கிறார். மேலும் 'மகாநதி' படத்தில் நடிகை சாவித்ரி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை கீர்த்தி சுரேஷுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு பல ஆங்கிள்களில் போஸும் கொடுத்துள்ளார்.

publive-image

நடிகை ரோஷினி ஹரிபிரியன்
Advertisment
Advertisements
publive-image

நடிகை ரோஷினி ஹரிபிரியன்
publive-image

நடிகை ரோஷினி ஹரிபிரியன்
publive-image

நடிகை ரோஷினி ஹரிபிரியன்

இந்த புகைப்படங்களை பார்த்த அவரது ரசிகர்கள் லைக் செய்ததோடு, சினிமாவில் இவங்களே நடித்திருக்கலாம் போல போன்ற கமெண்டுகளையும் செய்துள்ளனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  " (https://t.me/ietamil)

Serial Actress Roshni Hari Priyan Bharathi Kannamma Serial Tamil Serial News Tamil Serial Update Vijaytv Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: