பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைக்கு டும்… டும்… கெட்டி மேளம்!
Pandian Stores fame Serial Actress Kavitha Gowda got married Tamil News: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் மீனாட்சியாக நடித்த நடிகை கவிதா கவுடாவுக்கு நேற்று தான் திருமணம் நடைபெற்றுள்ளது.
Pandian Stores fame Serial Actress Kavitha Gowda got married Tamil News: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் மீனாட்சியாக நடித்த நடிகை கவிதா கவுடாவுக்கு நேற்று தான் திருமணம் நடைபெற்றுள்ளது.
Tamil serial news today: நடிகை கவிதா கவுடா, விஜய் டிவியில் ஒளிபரப்பான 'மகாபாரதம்' சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார். தொடர்ந்து சில கன்னட மற்றும் தெலுங்கு சீரியல்களில் நடித்தார். தற்போது தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் மீனாட்சியாக நடித்திருந்தார். இதற்கிடையில் கன்னடத்தில் ஒளிபரப்பாகிய 'பிக் பாஸ்' சீசன் 6ல் வாய்ப்பு கிடைத்ததால் தொடரில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது.
Advertisment
நடிகை கவிதா கவுடா
கன்னடத்தில் நடந்த 'பிக் பாஸ்' சீசன் 6ல் கலக்கிய இவரின் புகழ் பட்டி தொட்டியெல்லாம் பரவியது. இந்த நிகழ்ச்சியில் கடும் போட்டி நிலவிய போதும் இறுதி போட்டியாளராக தேர்வானார் நடிகை கவிதா. இதனைத் தொடர்ந்து லக்ஷ்மி பிரம்மா எனும் சீரியலில் நடித்து வந்தார். இந்த சீரியலில் உடன் நடித்த சந்தன்குமார் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. சில நாட்களிலேயே நட்பு காதலாக மாறியது. எனவே இரு வீட்டாரோடும் கலந்து பேசிய இந்த காதல் ஜோடி, கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி நிச்சயதார்த்த விழாவை நடத்தியது.
Advertisment
Advertisements
தற்போது கொரோனா தொற்று அச்சம் நீடித்து வரும் நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளுடன் இந்த காதல் ஜோடியின் திருமண நிகழ்ச்சி நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். இருப்பினும் இவரது ரசிகர்களும், திரை பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.