விஜய் டிவி-யை முந்திய சன் டிவி; டிஆர்பியில் தொடர்ந்து முதலிடம்

Top 5 tamil serial list in tamil: சமீபத்தில் வெளியான டிஆர்பி மதிப்பீடுகளில் சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்து வருகின்றன.

tamil serial news today: top 5 tamil serial list in tamil

Tamil serial news Today: சின்னத்திரையில் கடும் போட்டி நிலவக்கூடிய 2 தொலைக்காட்சிகள் என்றால் சன் டிவி – விஜய் டிவி என்று எளிதில் கூறி விடலாம். அந்த  அளவிற்கு இந்த இரு டிவிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. இதனால் என்னவோ இந்த டிவி-களில் வரும் நிகழ்ச்சிகள் டிஆர்பி ரேட்டிங்கில் டாப் -5 இடத்தை பிடித்து விடுகின்றன. இதில் ஒரு சோகமான விஷயம் என்னவனென்றால், இந்த இரு டிவிகளுடன் நாங்களும் போட்டி போடுகிறோம் என்று சொல்லிக் கொள்ளும் ஜீ தமிழின் நிகழ்ச்சிகள் ஒன்று கூட டாப் – 5 இல்லை. 

டாப் – 5 சீரியல்கள்

இந்த மாதத்தின் 1 முதல் 7ம் தேதி வரையில் உள்ள காலகட்டத்திற்கான டிஆர்பி விவரங்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தொடர்ந்து 18வது வாரமும் சன் டிவியின் ரோஜா சீரியல் முதலிடத்தில் உள்ளது. 2ம் இடத்தில் அந்த டிவியின் வானத்தை போல சீரியல் உள்ளது. 

தொடர்ந்து பல வாரங்களாக முதல் இடத்திலும், பின்னர் சில வாரங்கள் 2ம் இடத்திலும் இருந்த விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா தற்போது 3ம் இடத்திற்கு நகர்ந்து, பெரும் சரிவை சந்தித்துள்ளது. மேலும் அந்த டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் 5ம் இடத்தில் உள்ளது. 

டாப் – 5 சேனல்கள்

டாப் 5 தமிழ் சேனல்கள் லிஸ்ட்டை பொறுத்தவரை சன் டிவி தனது முதல் இடத்தை தக்கவைத்துள்ளது. 2ம் இடத்தில் எப்போதும் போல விஜய் டிவி உள்ளது. இருப்பினும் இந்த இரு சேனல்களுக்கு இடையேயான புள்ளிகள் வித்தியாசம் அதிகரித்து உள்ளது. 

இந்த டாப் 5 பட்டியலில் ஜீ தமிழ் 3ம் இடத்திலும், கே டிவி 4ம் இடத்திலும், விஜய் சூப்பர் 5ம் இடத்திலும் உள்ளன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” (https://t.me/ietamil)

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial news today serial actress gabrella sellus corona rumours tamil news

Next Story
எப்போதும் புடவைதானா.. அசத்தும் ரித்திகா லேட்டஸ்ட் ஃபோட்டோஷுட்!rithika
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express