Sun TV Show : சன் டிவி-யின் 'கிராமத்தில் ஒரு நாள் ரியாலிட்டி ஷோ', மறு ஒளிபரப்பாகி வருது. இதில் சன் லைஃப் சானலில் சொப்பன சுந்தரி ரியாலிட்டி ஷோவில் கலந்துக் கொண்ட பிரியங்கா ரூத் பொள்ளாச்சியில் கோழி பிடிக்கறாங்க. பிரியங்கா, திவ்யா, சஞ்சனா சிங் போன்றவர்கள் கிராமத்தில் ஒரு நாள் ரியாலிட்டி ஷோவுக்காக பொள்ளாச்சிக்கு சென்று இருந்தனர். அப்போது கிராமத்தில் ஒரு நாள், நல்ல சாமர்த்தியமாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்று ஒரு டாஸ்க். அதில் பிரியங்கா ரூத் நன்றாகவே கிராமத்து வாழக்கையை வாழ்ந்து இருக்கார். இவர் அன்று அணிந்திருந்த காஸ்ட்யூம் செம!
டாஸ்மாக் விவகாரம் : உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு
நடு ரோட்டில் நின்று கொண்டு, ஒரு பையனிடம் லிஃப்ட் கேட்டார் பிரியங்கா. அந்த இளைஞர் தாராள மனதுடன் தனது புல்லட்டையே ஓட்ட கொடுத்துவிட்டார். அதில், அந்த இளைஞருக்கு லிஃப்ட் கொடுத்து, பிரியங்கா பொள்ளாச்சியில் ஒருவர் வீட்டு அருகில் வந்தவுடன் இறங்கிக் கொண்டார். அங்கு ஒரு வீட்டில் வேலை வாய்ப்பு கேட்க, டிவி பிரபலம் என்றால் வேலை கிடைக்காமலா போய்விடும்.? வேலை கிடைத்த வேகத்தில் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு இருந்த கோழியை பிடித்தார். பின்னர் மாட்டுத் தொழுவத்தில் சாணி அள்ளிக் கொட்டி, தொழுவத்தை சுத்தம் செய்து, அப்பாடா என்று நிமிர்ந்தார்.
‘அண்ணனைப் பார்க்க வந்து கிடைத்த வாய்ப்பு’: காயத்ரி சாஸ்த்ரி
அடுத்து வேலைகள் அவரை ஒய்வு எடுக்க விடாமல் செய்ய, மாட்டை வெளியில் அழைத்து வந்து குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் பூசி, மாலை போட்டு, துணி போர்த்தி, பலூன் கட்டிவிட்டு, பொட்டு வச்சு அழகு படுத்தினார். ’கோமாதா எந்தன் குல மாதா’ என்று மாட்டுக்கு ஆரத்தி எடுத்து சூடம் காண்பித்து வணங்கி இருந்தால் இன்னும் நன்றாக இருந்து இருக்கும். சரி.. யார் இந்த பிரியங்கா ரூத்? சொப்பன சுந்தரி நிகழ்ச்சி மூலம் அறிமுகம் ஆகி, சன் டிவியில் சில நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வந்த பிரியங்கா, கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் படத்தில் நடித்தவர். அதன் பிறகு இவரை எங்கும் பார்க்க முடியவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”