Advertisment

Tamil Serial Rating : இன்னும் ஆயிரம் எபிசோடு வந்தாலும் இப்படித்தான் இருக்குமா? ரோஜா சீக்ரெட்

Tamil Serial Update : சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம்.

author-image
WebDesk
New Update
Tamil Serial Rating : இன்னும் ஆயிரம் எபிசோடு வந்தாலும் இப்படித்தான் இருக்குமா? ரோஜா சீக்ரெட்

Tamil Serial Rating Update : சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல் ஒரு இன்றியமையாத பொழுதுபோக்காக மாறிவிட்டது என்று கூறலாம். அந்த அளவிற்கு சீரியல் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துள்ளது. இதனை தங்கவைத்துக்கொள்ளும் நோக்கில் நாள்தோறும் புதிய சீரியல்கள் களமிறங்கி வருகினறனர். பழைய சீரியல்கள் ஒருசில முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சீரியல் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாள்தோறும் உயர்ந்து வருகிறது.

Advertisment

சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம். இதில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் ஒவ்வொரு சீரியலுக்கும் தினசரி ப்ரமோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த ப்ரமோவை வைத்தே அன்றைய எபிசோடுகளின் கதையை தீர்மானித்து விடலாம். அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள ப்ரமோக்களை வைத்து எந்த சீரியல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்ப்போம்.

நாம் இருவர் நமக்கு இருவர்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் மாயன் எப்போமே கெத்து தான் என்று கூறியுள்ளார். மறறொரு ரசிகர் மாயன இப்படி பார்த்து எத்தனை நாள் ஆச்சு என்று கூறியுள்ளார். மற்றொருவர் பாசிட்டிவாக மாற்றுங்கள் ப்ளீஸ் அண்ணன் தம்பி இருவரும் சேர வேண்டும் எப்பவும் எதிரி எதிரியாகத் தான் இருக்கவும் அதுவும் அண்ணன் தம்பியா இருக்கக் கூடாது வேறு யாராவது இருந்தால் நல்லது என்று கூறியுள்ளார். மாயன் மாஸ் உனக்கு அண்ணன் டா நானு செம்ம டயலாக்.இனி மாயன ரியல் எஸ்டேட் பிஸ்னஸ் காரரா பார்க்க போரோம்.மாயன் என்றால் கெத்து என்று கூறியுள்ளார்.

ரோஜா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் அஸ்வின் பேய் வருது பேய் வருது ன்னு பிரியாவை பார்த்து சொன்னது சூப்பர் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் ஆயிரம் எபிசோடு வந்தாலும் செண்பகம் அம்மா பழைய ஞாபகம் வராது அர்ஜுன் ரோஜா சாந்திமூகுர்தமும் நடக்காது என்று கூறியுள்ளார். இந்த ரோஜாவில் அஸ்வின் நடிப்பதால் தான் கோகுலத்தில் சீதை இதில் வரும் அஸ்வின் கேரக்டரை ஜெயிலில் இருக்கும் மாதிரி சீன் போகுது என ஒரு ரசிகர் கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் இப்படியே போன என்ன அர்த்தம் எப்போ உண்மை தெரியும் என்று கேட்டுள்ளனர்.

பாக்யலட்சுமி

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் கோபி சார் உங்க ஜோலி முடிஞ்சிது என்று கூறியுள்ளார். மறறொறு ரசிகர் பாக்கியாவிற்கு நல்ல ஒரு மாமனார் என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் தாத்தாவோட அதிரடி ஆக்ஷன் சூப்பர் என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் என்ன இப்படி சட்டுனு கோபிய வீட்ல மாட்டி விட்டூட்டீங்க என்று கேட்டுள்ளனர். மற்றொரு ரசிகர் என்ன கோபி ராதிகா பேர கேட்டாலே உதருதில்ல என்று கேட்டுள்ளார். இதுதான் இந்த சீரியலொட திரும்ப திரும்ப பாக்க வெக்குது கோபி காலி என்று கூறியுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் மீனா செம்ம நடிப்பு என்று என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் மீனா மூர்த்தியைத்தான் இப்படி ஜாடையாக சொல்கிறார் என்று கூறியுள்ளனர் மேலும் ஒரு ரசிகர் பரவாயில்லை இப்படியே ஜாலியா கதையை கொண்டுபோங்க அதான் எல்லாருக்கும் நல்லது என்று கூறியுள்ளார். மேலும ரசிகர்கள் பலரும் கதைக்கு வராம ஏன் இப்படி பண்ணிக்கிட்டு இருக்கீ்ங்க என்று கேட்டுள்ளனர்.

பாரதி கண்ணம்மா

இந்த பரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் பரவாயில்லையே பாரதிக்கும் ஃபீலிங்ஸ் இருக்கு என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் உன் பொண்ணுதான் அது சீக்கிரமா டிஎன்ஏ டெஸ்ட் எடு பாரதி என்று கூறியுள்ளனர். மற்றொரு ரசிகர் கண்ணம்மாவுக்கு இதுவே பெரிய வெற்றிதான் என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் பாரதியை பார்த்தால் பாவமா இருக்கு என்றே கூறியுள்ளனர்.

ராஜா ராணி 2

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இப்படி சந்தோஷமா இருக்காதீங்க அப்புறம் பெரிய பிரச்சனை வரும் எனறு கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இப்படி நீங்க சந்தோஷமா இருந்தாவே அடுத்து எதாவது பிரச்சனை வருமே என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் அடுத்து என்ன பிரச்சனை வரபோகுது என்று கேட்டுள்ளனர்.

இந்த கருத்துக்களை வைத்து பார்க்கும்போது, நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறலாம். மாயன் மாறனை ஏமாற்றும் காட்சியை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். மற்றபடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என்று கூறலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment