Tamil Serial News: சினிமா நடிகைகளை விட, சீரியல் நடிகைகள் செய்யும் ஒவ்வொரு விஷயமும் இணையத்தில் தெறி ஹிட்டாகிவிடும். காரணம், சீரியல் நடிகைகள் படம் ரிலீஸாகும் போது தான், ரசிகர்களிடம் நெருக்கமாவார்கள். ஆனால் சீரியல் நடிகைகளோ, தினமும் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள்.
இந்தியாவின் மத சுதந்திரம் மீது விமர்சனம்; அமெரிக்க காங்கிரஸ் ஆலோசனை குழுக்களுக்கு விசா மறுப்பு
,
அந்த வகையில் வம்சம் சீரியலில் நடித்த பூமிகா தான் இப்போது இணையத்தில் ட்ரெண்ட். இவரது முழுப் பெயர் சந்தியா ஜகர்லமுடி. இவர் 1985 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்தவர். தனது பள்ளிப்படிப்பை செயின்ட் ஜோசப் பள்ளியில் முடித்தார். அதன் பிறகு BA ஆங்கிலம், M.Sc உளவியல் ஆகிய படிப்பை முடித்தார்.
’செல்லமடி நீ எனக்கு’ என்ற சீரியல் மூலம் தான் சந்தியா முதன் முதலில் சின்னத்திரைக்கு அறிமுகமானார் அதன்பிறகு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ’அத்திப்பூக்கள்’ என்ற சீரியலில் நடித்து மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார். அதன் பிறகு ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் ஒளிபரப்பப்பட்ட ’வம்சம்’ சீரியலில் பூமிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
’அழகு’ நிகிலா விமல், ’ஆஸம்’ ஷ்ரதா ஸ்ரீநாத் – முழு புகைப்படத் தொகுப்பு
,
வம்சம் சீரியலில் மலைவாழ் மக்கள் எப்படி இருப்பார்களோ அதேபோல் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த கதாபாத்திரத்தின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார். சீரியலில் நடிக்கும் பொழுது மிகவும் கொழுக் மொழுக் என்று இருந்தார். ஆனால் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் வெகுவாக உடல் இளைத்து, ஒல்லியாக மாறியுள்ளார். சந்தியாவின் அந்தப் படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”