விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்யலட்சுமி சீரியலின் இன்றைய எபிஷோடில் என்ன நடந்தது என பார்ப்போம். நேற்றைய எபிசோடில் பாக்யா , ராதிகாவின் வீட்டுக்கு போகப்போவதாகவும், கோபியிடம் உங்கள் காரில் வருகிறேன் என சொல்கிறாள். இதைக் கேட்டு கடும் அதிர்ச்சி அடைகிறார் கோபி.
இன்றைய எபிஷோடில், பாக்யாவை அழைத்துச் செல்ல மறுக்கும் கோபியை வீட்டில் உள்ள அனைவரும் வற்புறுத்துகின்றனர். இதனால் பாக்யாவை அழைத்து செல்வதாக ஒப்புக்கொள்கிறார். ஆனாலும், கோபி பாக்யாவிடம் ராதிகா வீட்டில் விட மாட்டேன். ரோட்டிலேயே இறங்கிக்கோ என்கிறாள். ஆனால், பாக்யா கட்டாயப்படுத்தி காரில் ராதிகா வீடு முன்பு வரை கூட்டி செல்கிறார்.
காரிலிருந்து வேகமாக இறங்கச்சொல்லி பாக்யாவை திட்டுகிறார் கோபி. ஆனால் பாக்யா கோபியையும் உள்ளே வரச் சொல்கிறார். கோபியோ முடியாது என கூறிவிட்டு அங்கிருந்து வேகமாக கிளம்பிவிடுகிறார்.
பள்ளியில் நடக்கும் Charity தினம் நிகழ்ச்சிக்காக குலாப்ஜாமுன் செய்து இனியாவிடம் கொடுத்தனுப்புகிறார் பாக்யா. அதை ஒரு கப் 10 ருபாய் என பள்ளியில் விற்கிறார் இனியா. இதன் மூலம் நிகழ்ச்சியில் எல்லோரையும் விட அதிக பணம் சம்பாதிக்கிறாள் இனியா.
பள்ளி முதல்வர் குலாப்ஜாமூன் நன்றாக இருக்கிறது, யார் செய்தது என கேட்க, எங்க அம்மா தான் என சொல்கிறாள் இனியா. உங்க அம்மா என்ன பன்றாங்க என கேட்க, எங்க அம்மா ஒரு பிசினஸ் வுமன் என இனியா சொல்ல, நல்ல அம்மாவும் கூட என சொல்கிறார் தலைமை ஆசிரியர். மேலும் உனக்காக அவர் மிகுந்த வருத்தப்படுகிறார். எனவே நீ நன்றாக படி என சொல்லிவிட்டு செல்கிறார் தலைமையாசிரியர்.
ராதிகாவிடம் 3000 ரூபாயை கொடுத்து, மொத்த பணத்தையும் ஒன்றாக கொடுக்க முடியாது, மாதாமாதம் கொடுத்துவிடுகிறேன் என சொல்கிறார் பாக்யா.
பின்னர் ராதிகாவின் மகள் மயூ உடன் சிறிது நேரம் பரமபதம் விளையாடுகிறார் பாக்யா. அதன் பின் மிகவும் சோகமாக இருக்கும் ராதிகாவிடம் அதற்கான காரணத்தை பாக்யா கேட்கிறார். அதற்கு ராதிகா அவரது கணவர் ராஜேஷ் விவாகரத்து கொடுக்காமல் தினமும் குடித்துவிட்டு வந்து தகராறு செய்வதாக சொல்கிறார்.
இதை கேட்டு வருத்தப்படும் பாக்யா, நீங்க எங்க வீட்டுக்கு வந்துவிடுங்கள் என ராதிகாவை அழைக்கிறார், ஆனால் ராதிகா தயக்கத்துடன் மறுக்கிறார். சரி உங்கள் மகளையாவது 2 நாட்களுக்கு அனுப்பி வையுங்கள், அவள் அங்கே மகிழ்ச்சியாக இருக்கட்டும் என கேட்க, ராதிகா சற்று நேரம் யோசித்துவிட்டு ஒப்புக்கொள்கிறார்.
அதன் பின் மயூவை அழைத்துக்கொண்டு தன் வீட்டுக்கு கிளம்புகிறார் பாக்யா. இத்துடன் இன்றைய எபிஷோடு முடிவடைகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil