Vijay TV Serials: கொரோனா ஊரடங்கு காரணமாக சினிமா மற்றும் சின்னத்திரை படபிடிப்புகள் நிறுத்தப்பட்டன. 3 மாதங்களுக்கும் மேலாக பழைய எபிசோட்களே மீண்டும் ஒளிபரப்பப்பட்டன. சில வாரங்களுக்கு முன்பு, கட்டுப்பாடுகளுடன் சின்னத்திரை படபிடிப்பை நடத்திக் கொள்ள தமிழக அரசு அனுமதியளித்தது. அதன்படி இன்று முதல் முன்னணி சேனல்களில், புதிய எபிசோட்கள் ஒளிபரப்பாகவிருக்கின்றன.
’கந்த சஷ்டி படித்தேன்’: தொண்டர்களை உற்சாகமாக்கிய விஜயகாந்த் வீடியோ
அதன்படி விஜய் டிவி-யில் இன்று இரவு 8.30 மணிக்கு ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ஒளிபரப்பாகவிருக்கிறது. கண்ணம்மாவுடன் பாரதிக்கு திருமணமானாலும், அவன் மீது அஞ்சலி, வெண்பா என இரண்டு பெண்கள் ஆசைப்படுகின்றனர். கண்ணம்மாவிடமிருந்து பாரதியைப் பிரித்து, அந்த இடத்திற்கு தாங்கள் வர வேண்டும் என்பதே அவர்கள் ஒவ்வொருவரின் எண்ணமும். கண்ணம்மா அப்பாவின் இளையதாரத்தின் மகள் அஞ்சலி. அவளை பாரதியின் தம்பி அகிலனுக்கு பெண் பார்க்கப் போகிறார்கள். ஆனால் அவளுக்கோ, பாரதியைப் பிடித்து விடுகிறது. இருப்பினும் அவனை அடைவதற்காக, அகிலனை திருமணம் செய்துக் கொள்கிறாள்.
அக்கா என்றபோதிலும், கண்ணம்மாவுக்கு நிறைய தொல்லைகளைக் கொடுத்து வருகிறாள். போதாக்குறைக்கு, பாரதியுடன் மருத்துவ கல்லூரியில் படித்த வெண்பாவுக்கும், அவன் மீது காதல். இன்னொரு பெண்ணும் அவன் மீது ஆசைப்பட, அவளை கொல்வதற்காக விபத்து ஏற்படுத்துகிறாள் வெண்பா. அதில் பாரதிக்கும் அடிபட்டு விடுகிறது. தனக்காக அவன் காத்திருக்க வேண்டும் என்பதற்காக, இனி உனக்கு குழந்தை பிறக்காது, என பொய் சொல்லி விடுகிறாள் வெண்பா.
இதற்கிடையே கண்ணம்மா கர்ப்பமாகிறாள். சந்தோஷப் படும் பாரதியை தனது வில்லத்தனங்களால் குழம்ப விடுகிறாள் வெண்பா. உனக்கு குழந்தை பிறக்காது பாரதி என மீண்டும் மீண்டும் சொல்கிறாள். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், ”என்னோட டெஸ்ட் ரிசல்ட்ன்னு தான நெனச்ச. முதல்ல நான் எதுக்குடி டெஸ்ட் எடுக்கணும்? உன்ன மாதிரி உடம்பு முழுக்க விஷமா இருக்க ஒருத்தி வந்து என்ன ஏத்தி விடுவா. என் பொண்டாட்டிய பத்தி என் கிட்டயே தப்பு தப்பா சொல்லுவா. அதெல்லாம் கேட்டுட்டு, குடுகுடுன்னு ஓடி போய் டெஸ்ட் எடுத்துட்டு வந்து வெண்பா.. வெண்பா.. எனக்கு எப்படி ரிசல்ட் வந்திருக்கு பாரேன்னு நிப்பேன்னு பாத்தியா. என் கண்ணம்மா கர்ப்பமா இருக்கா, எனக்கிருந்த குறை சரியாச்சுங்கறதுக்கு அது தான் ஆதாரம். எவனோ ஒருத்தன் டெஸ்ட் பண்ணி தர்ற ரிசல்ட் எல்லாம் அவசியமே இல்ல” என வெண்பாவிடம் கூறுகிறான் பாரதி.
நீண்ட நாட்கள் கழித்து புதிய எபிசோட்கள் ஒளிபரப்பாவதால், அது ரசிகர்களை சுவாரஸ்யமாக ஃபீல் பண்ண வைக்கும் வழியாக இந்த ப்ரோமோ வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”