”யாரு கிட்ட என்ன பேசுற”: வெண்பாவை பின்னி பெடலெடுத்த கண்ணம்மா!

"நான் இந்த ஊர்ல தான் இருப்பேன். நல்லா வாழ்வேன். என் குழந்தைய நல்லபடியா வளப்பேன். பாக்க தான போற”

"நான் இந்த ஊர்ல தான் இருப்பேன். நல்லா வாழ்வேன். என் குழந்தைய நல்லபடியா வளப்பேன். பாக்க தான போற”

author-image
WebDesk
New Update
Vijay TV Bharathi Kannamma serial Promo

விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியல்...

Tamil Serial News: விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ’பாரதி கண்ணம்மா’ சீரியல் விறுவிறுப்பான கதை களத்தில் நகர்கிறது.

Advertisment

கண்ணம்மாவின் நடத்தையை சந்தேகித்து, அவள் வயிற்றில் வளர்வது தனது குழந்தை இல்லை எனும் முடிவுக்கு வந்து விடுகிறான் பாரதி. ஆனால் இதை வெளியில் சொல்ல முடியாமல், கண்ணம்மாவுடன் பேசுவதை தவிர்த்து விடுகிறான். கண்ணம்மாவுக்கும், குடும்பத்தினருக்கும் என்ன நடந்தது எனத் தெரியாமல் குழம்பிப் போகிறார்கள்.

தொகுப்பாளினி மட்டுமல்ல பரதமும் கை வந்த கலை: சன் டிவி அம்மு!

இதற்கு முடிவு கட்டும் நோக்கத்தில், மொத்த குடும்பமும் ஒன்று கூடி என்ன நடந்தது, என பாரதியை துருவி துருவி கேட்கிறார்கள். ’அது என்னன்னு சொன்னா, இந்த குடும்பத்தோட நிம்மதி கெட்டுப் போய்டும்’ என பாரதி சொல்ல, அதை தெரிந்துக் கொள்வதில் குடும்பத்தினர் தீவிரம் காட்டுகிறார்கள். கடுகடுத்த முகத்துடன், ‘கண்ணம்மா சுமக்குறது என்னோட குழந்தை இல்ல, அது வேற ஒருத்தனோடது, இவள் ஒழுக்கங்கெட்டவ’ என்கிறான். இதற்கு பாரதியின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, கண்ணம்மாவுக்கு ஆதரவாக நிற்கிறார்கள்.

Advertisment
Advertisements

ஆனால் வெண்பா, அஞ்சலி ஆகியோர் எப்படியாவது கண்ணம்மாவை வெளியேற்ற வேண்டும் என நினைக்கிறார்கள். அஞ்சலியோ ஒருபடி மேலே சென்று, பையை எடுத்துக் கொடுக்கிறாள். அவளை கண்ணத்தில் அறைந்தவாறு, வீட்டை விட்டு வெளியேறுகிறாள் கண்ணம்மா. இந்த அதிர்ச்சியில் மாமியார் செளந்தர்யாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கண்ணம்மா வீட்டை விட்டு சென்றதில் அஞ்சலிக்கும், வெண்பாவுக்கும் சந்தோஷமோ சந்தோஷம்!

மதங்களை கடந்த காதல்: கோலிவுட்டின் வெற்றி தம்பதிகள்!

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், கண்ணம்மாவை வழிமறித்து, “கண்ணம்மா நில்லு... வயித்துல குழந்தையோட ரோட்ல வந்து நிக்குற. இப்போ வேற நிறைய பசிக்குமே. சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவ? பிச்சை எடுப்பியா? குழந்தைய வளக்க வேற நிறைய செலவாகுமே. பேசாம உன் வயித்துல வளர்ற குழந்தைய கொன்னுடு” என்பது போல் சொல்கிறாள். இதைக் கேட்ட கண்ணம்மாவுக்கு கோபம் கொப்பளித்து, வெண்பாவை அடிக்கிறாள். ”ஏ.... யார் கிட்ட என்ன வார்த்த டி பேசுற. நான் இந்த ஊர்ல தான் இருப்பேன். நல்லா வாழ்வேன். என் குழந்தைய நல்லபடியா வளப்பேன். பாக்க தான போற” என வீரநடை போடுகிறாள்.

அடுத்து என்ன நடக்கும்? இன்று இரவு 8.30 மணிக்கு பார்ப்போம்...

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Vijay Tv Tv Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: