Tamil Serial News: விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகம். டாக்டர் பாரதி, அவனது மனைவி கண்ணம்மாவை மையமாக வைத்த கதை.
ப்பா..! என்ன அழகு.. பிகில் தென்றல் ஆல்வேஸ் ஹோம்லி அழகி தான்!
கண்ணம்மாவுடன் பாரதிக்கு திருமணமானாலும், அவன் மீது அஞ்சலி, வெண்பா என இரண்டு பெண்கள் ஆசைப்படுகின்றனர். கண்ணம்மாவிடமிருந்து பாரதியைப் பிரித்து, அந்த இடத்திற்கு தாங்கள் வர வேண்டும் என்பதே அவர்கள் ஒவ்வொருவரின் எண்ணமும். கண்ணம்மா அப்பாவின் இளையதாரத்தின் மகள் அஞ்சலி. அவளை பாரதியின் தம்பி அகிலனுக்கு பெண் பார்க்கப் போகிறார்கள். ஆனால் அவளுக்கோ, பாரதியைப் பிடித்து விடுகிறது. இருப்பினும் அவனை அடைவதற்காக, அகிலனை திருமணம் செய்துக் கொள்கிறாள்.
அக்கா என்றபோதிலும், கண்ணம்மாவுக்கு நிறைய தொல்லைகளைக் கொடுத்து வருகிறாள். போதாக்குறைக்கு, பாரதியுடன் மருத்துவ கல்லூரியில் படித்த வெண்பாவுக்கும், அவன் மீது காதல். இன்னொரு பெண்ணும் அவன் மீது ஆசைப்பட, அவளை கொல்வதற்காக விபத்து ஏற்படுத்துகிறாள் வெண்பா. அதில் பாரதிக்கும் அடிபட்டு விடுகிறது. தனக்காக அவன் காத்திருக்க வேண்டும் என்பதற்காக, இனி உனக்கு குழந்தை பிறக்காது, என பொய் சொல்லி விடுகிறாள் வெண்பா. இதற்கிடையே கண்ணம்மா கர்ப்பமாகிறாள். சந்தோஷப் படும் பாரதியை தனது வில்லத்தனங்களால் குழம்ப விடுகிறாள்.
அது தன் குழந்தை தான் என்பதில் உறுதியாக இருக்கிறான் பாரதி. இருப்பினும் அவனது குழப்பம் தெளியவில்லை. இதனை வெளியில் சொல்லவும் முடியாமல் மறக்கவும் முடியாமல், தடுமாறுகிறான். பாரதி முன்பு போல தன்னிடம் இல்லை என்பதால் மனமுடைந்துப் போகிறாள் கண்ணம்மா.
வேலை, குடும்பம் செம பிஸி… சின்னத்திரை தொகுப்பாளினிகளின் கணவர்கள்!
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், கண்ணம்மாவுக்கு ஆறுதல் கூறுகிறார் அவளின் மாமியார் செளந்தர்யா. ”வேலைக்கு போற ஆம்பளைங்களுக்கு வெளியில ஆயிரத்தெட்டு பிரச்னை இருக்கும். சில விஷயத்த பொண்டாட்டி கிட்ட சொல்லுவாங்க. சில விஷயத்த சொல்லவே முடியாது. அது தான் ஆம்பளைங்க குணம். அந்த டென்ஷன் நம்ம கூடவே போகட்டும், அதெல்லாம் உங்ககிட்ட சொன்னா, இன்னும் கற்பனையா பெருசா நினைச்சு பயப்படுவீங்கன்னு தான் ஒவ்வொரு ஆம்பளையும் அவங்களோட கஷ்டம், அவமானம் எல்லாத்தையும் அவங்களுக்குள்ளேயே வச்சிக்கிறாங்க.
இத நீ புரிஞ்சுக்காம இப்படி அழுதுட்டே இருந்தா, இதனால வயித்துல இருக்குற குழந்தைக்கு ஒரு பிரச்சினை வந்துச்சின்னா, இத அவனால தாங்க முடியுமா? இல்ல உன்னால தான் தாங்க முடியுமா? இல்ல என்னால தான் தாங்க முடியுமா? அவன் தான் உன்கிட்ட ஏதோ ஒரு விஷயத்தை மறைக்கிறான். அதனால தான் விலகி போறான், கோபப்பட்டு வெறுப்போடு நடத்துகிறான். இந்த நொடில இருந்து, நான் உன்ன அரவணைச்சு, அன்பு செலுத்தி உனக்கு பக்க பலமா நான் இருப்பேன். அதனால இனி நீ பாரதியை நினைச்சு, வருத்தப் படுறதை விட்டுவிட்டு, உன் அத்தை உனக்கு ஆதரவா இருக்காங்கன்னு சந்தோஷப்படு” என கண்ணம்மாவை நெகிழ்ச்சியடைய செய்கிறார் மாமியார் செளந்தர்யா.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”