Tamil Serial Bharathi Kannamma : விஜய் டிவியில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடர் பாரதி கண்ணம்மா. கூட்டு குடும்பம், மற்றும் கணவன் மனைவி இடையே நடைபெறும் பிரச்சனைகளை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கு ரசிகர்கள் கூட்டங்கள் அதிகம். இந்த சீரியலில் நாயகி கண்ணம்மாவாக நடித்து வரும் ரோஷினி ஹரிபிரியன் தாஸ; ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறார்.
கதையின் நாயகன் பாரதியாக நடித்து வரும் அருண் பிரசாத் வில்லனத்தம் கலந்த கதாப்பாத்திரத்தில் சரியான நடிப்பை வெளிப்படுத்தி வரும் நிலையில், அவருடைய தோழியாக வெண்பா கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் பரினா ரஹ்மான் தனது வில்லத்தனதால் இல்லத்தரசிகளின் கோபத்திற்கு ஆளாகி வருகிறார். இதில் பாரதியை திருமணம் செய்துகொள்ளும் ஆசையில், வெண்பா செய்த சூழ்ச்சியால் பாரதி – கண்ணம்மா இருவரும் பிரிந்து விடுகின்றனர்.
/tamil-ie/media/media_files/uploads/2021/02/bharathi-kannamma.jpg)
அப்போது கர்ப்பமாக இருக்கும் கண்ணம்மா பாரதியை பிரிந்து சென்ற நிலையிலும், வெண்பா அவரை கொலை செய்ய பல வழிகளில் முயற்சி செய்து தொல்வியடைகிறார். இதற்கிடையே கர்ப்பமாக இருந்த கண்ணம்மாவுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கிறது. ஆனால் தனக்கு பிறந்தது இரட்டை குழந்தைகள் தான் என்று கண்ணம்மாவுக்கு தெரிவதற்குள் அவரது அத்தை சௌவுந்தர்யா ஒரு குழந்தையை எடுத்துச்சென்று விடுகிறார். அதனைத் தொடர்ந்து சௌந்தர்யா கண்ணம்மாவை பல இடங்களில் தேடுகிறார். ஆனால் எங்கும் அவர் கிடைக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து பல ஊர்களில் பல தொழில்கள் செய்து வரும் கண்ணம்மா 8 வருடங்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு திரும்புகிறார். இதில் சமையலில் அசத்தும் கண்ணம்மாவுக்கு, அவரது அத்தையிடம் வளரும் கண்ணம்மாவின் மகள் ஹேமா படிக்கும் பள்ளியில் சமையல் காண்ராக்ட் கிடைக்கிறது. அப்போது ஹேமாவுக்கும் கண்ணம்மாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் நெருக்கமாகின்றனர். இந்த நெருக்கத்தினால் ஹேமா தங்களது வீட்டில் வந்து சமைக்க கண்ணம்மாவை அழைக்கிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2021/02/bharathi2.jpg)
இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட கண்ணம்மா தான் போவது தனது மாமியார் வீடுதான் என்று அறியாமல் அங்கே சென்றுவிடுகிறார். இது குறித்து விஜய் டிவி வெளியிட்டுள்ள ப்ரோமோவில், ஆட்டோவில் சென்ற கண்ணம்மாவுக்கு இது பாரதி வீடு எனத் தெரிய வர, அங்கிருந்து புறப்பட தயாராகிறாள். அவளைப் பார்த்த ஹேமா, விடாப்பிடியாக வந்து, கண்ணம்மாவை வீட்டுக்குள் அழைத்துச் செல்கிறாள்.
அங்கே வீட்டிற்குள் சென்றதும் 8 ஆண்டுகளாக தான் தேடிக் கொண்டிருந்த கண்ணம்மா தனது கண்முன் வந்து நிற்பதைப் பார்த்து, சந்தோஷத்திலும், ஆச்சர்யத்திலும் சிலையாக நிற்கிறார் மாமியார் செளந்தர்யா. உடனே அங்கு வரும் சௌந்தர்யாவின் கணவரும் கண்ணம்மாவை பார்த்த சந்தோஷத்தில் இருக்கிறார். அத்துடன் அனறை எபிசோடு முடிவுக்கு வருகிறது. தற்போது வீட்டிற்குள் வரும் கண்ணம்மாலுக்கு, ஹேமாவும் தனது குழந்தை தான் என தெரிய வருமா? அப்படி தெரிய வந்தால், கண்ணம்மாவும் பாரதியும் ஒன்று சேர்வார்களாக, ‘பாரதி கண்ணம்மா’ முடிவு பெறுமா? என்பதை இன்னும் சில நாட்கள் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"