scorecardresearch

சரித்திர பின்னணி கொண்ட புதிய சீரியல் : சன்டிவிக்கு வரும் விஜய் டிவி பிரபலம்

Tamil Serial News : விஜய் டிவி சிரியலில நடித்து பிரபலமாக நடிகை அனு தற்போது சன்டிவி சிரியலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சரித்திர பின்னணி கொண்ட புதிய சீரியல் : சன்டிவிக்கு வரும் விஜய் டிவி பிரபலம்

தமிழ் தொலைக்காட்சி முழுவதும் தற்போது சீரியல்மயமாகி வருகிறது. முன்னணி டிவி சேனல்கள் அனைத்தும் ரியாலிட்டி ஷோ மற்றும் படங்களை விட்டுவிட்டு சீரியல் எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது. அந்த வகையில், விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ்,ஆண்டாள் அழகர் உள்ளிட்ட சீரியல்கள் மிகவும் பிரபலமானவை.

இந்த சீரியல்களில் நடித்து சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை அனு. அதனைத் தொடர்ந்து ஜீ தமிழில் மெல்ல திறந்தது கதவு தொடரில் நடித்து மக்களிடம் பிரபலமான இவர், அதே டிவியில் மிஸ்டர் அன்ட் மிஸஸ் கில்லாடி உள்ளிட்ட நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

சமீபத்தில் விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீரியலில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த அனு, தற்போது சன் டிவியில் உருவாகும் சரித்திர பின்னணி கொண்ட ஒரு புதிய சீரியலில் நடிக்க இருப்பதாக அனு தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். புதிய சீரியலில் நடித்து வரும் அனுவுக்கு ரசிகர்களும், சின்னத்திரை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

விஜய்டிவி பிரபலம் நடிகை அனு

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial news vijay tv celebrity act in sun tv serial

Best of Express