Vijay TV, Mahabharatham: விஜய் டிவியில் மகாபாரதம் சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மதிய நேரத்தில் இரண்டு மணி நேரம் மறு ஒளிபரப்பாகி வருகிறது. கோவிட் 19 தொற்று காரணமாக லாக்டவுன் ஆரம்பித்ததில் இருந்து மகாபாரதம் சீரியல் இப்படி மறு ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் மொழி பெயர்ப்பு செய்து ஒளிபரப்பாகி வரும் இந்த மகாபாரதம் சீரியலை மக்கள் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர். கர்ணன் ரத தேவனுக்கும் தந்தைக்கும் பிறந்த மகன் இல்லை என்பதை கண்ணன், கர்ணனுக்கு சொல்லும் காட்சி ஒளிபரப்பாகியதில் பலருக்கும் கண் கலங்கி இருக்கும்.
போர் வேண்டாம் எனும் பஞ்ச பாண்டவர்களின் தூதுவராக கண்ணன் கவுரவர்கள் அரசவைக்கு செல்ல, அங்கு துரியோதனன் போர் நடக்கும். இனி சமாதானத்துக்கு இடமில்லை என்று கூறி விடுகிறான். பிதாமகர் பீஷ்மர் துரியோதனன் அறிவிழந்தான் என்று சொல்லி, போர் நடக்கட்டும். கவுரவர்கள் அழிவு நெருங்கி வந்துக்கொண்டு இருக்கிறது என்று கூறுகிறார். போரை நிறுத்திவிடு கண்ணா உன்னால் எல்லாம் முடியும் என்று காந்தாரி கண்ணனுக்கு கோரிக்கை வைத்து, கர்ணனை போர் வேண்டாம் என்று சமாதனப் படுத்தினால் இந்த போர் நடக்காது என்றும் ஆலோசனை கூறுகிறாள் காந்தாரி. குந்தி தேவியும், கண்ணா எத்தனையோ முறை நான் தான் கர்ணனின் தாய் என்பதை உணர்த்த அவனிடம் முயன்று இருக்கிறேன். என்னால் இயலவில்லை. நீயே இந்த பொறுப்பை எடுத்துக்கொள் கண்ணா என்று கூற, கண்ணனும் பொறுப்பை ஏற்று, கர்ணனின் வளர்த்த தாயை காணச் செல்கிறான்.
Advertisment
Advertisements
கர்ணன் இங்கு இருப்பதில்லையே. இப்போதெல்லாம் கர்ணன் அரண்மனை வாசம் தாம் அரசே என்று வளர்த்த தாய் ராதை சொல்கிறார். அறிவேன் தாயே.. அதோடு, இன்று இங்கு வருவதையும் அறிந்து தான் நான் இங்கு வந்துள்ளேன் என்று கண்ணன் கூறிக்கொண்டு இருக்கையில், கர்ணன் குதிரை மீது வளர்த்த தாயைக் காண வருகிறான். கொஞ்ச நேரம் கழித்து சற்று தள்ளி கர்ணனும், கண்ணனும் உரையாடிக்கொண்டு இருக்கையில், கர்ணன், திறமைக்கு அங்கீகாரம் என்பது போல தான் கவுரம் தான் கேட்டேன். பதிலாக எனக்கு அரசாளும் உரிமை கிடைத்து இருக்கிறது. இது எனக்கானது இல்லை. நான் பிறப்பால் சத்திரியன் அல்லவே என்று கூறுகிறான்.
அப்போதுதான் கண்ணன் சொல்கிறார், தாம் தமது பிறப்பின் ரகசியத்தை இன்னும் அறியவில்லை அரசே. தாங்கள் சூரியனின் புதல்வர். சூரியனின் மறு அம்சம் ஆவீர்கள். தங்களின் தாய் குந்தி ஆவார். ராதை தங்களின் வளர்ப்புத் தாய் ஆவார். தங்களுக்கு சந்தேகம் இருப்பின் தங்களால் சூரிய தேவனிடம் பேச முடியும்.கேட்டு பாருங்கள் என்று கூறிவிட்டு சென்று விடுகிறார். கர்ணன் கண்ணீர் மல்க தண்னை வளர்த்த தாய் ராதையிடம் உண்மையை கேட்க குதிரையில் வரும் காட்சி கலங்க வைப்பதாக இருக்கிறது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”