Advertisment

விஜய் டிவி மகாபாரதம்: குந்தி மறைத்து வைக்கும் விஷயம் என்ன?

திருவாய் சத்தியத்தை உரைக்காது என்று கண்ணன் உபதேசம் செய்ய, குந்தி உண்மையை மறைத்து விடுகிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vijay TV Mahabharatham, Tamil Serial News

Vijay TV Mahabharatham, Tamil Serial News

Vijay TV Serials: கோவிட் 19 தொற்று காரணமாக முதன் முதலில் லாக்டவுன் ஆரம்பித்த காலக்கட்டத்தில் டிடி நேஷனல் சானல் ராமாயணம் சீரியலை ஒளிபரப்பத் துவங்கியது. ரசிகர்கள் ஏகோபித்த ஆதரவு தர, டிடி நேஷனல் சானல் அடுத்தடுத்து மகாபாரதம், விஷ்ணுபுரம், ஸ்ரீ கிருஷ்ணா போன்ற புராதன சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. விஜய் டிவி, டிடி சானலில் ராமாயணம் ஒளிபரப்பத் துவங்கிய சில நாட்களில் மகாபாரதம் சீரியலை தினமும் காலை 11:30க்கு ஆரம்பித்து 1:30 மணி வரை ஒளிபரப்பு செய்து வந்தது. கடந்த வாரம் மகாபாரதம் சீரியல் முடிவை எட்டியது.

Advertisment

கிடுகிடுவென உயரும் கொரோனா தொற்று ; ஆட்டம் காணும் கேரள தலைநகரம்!

இருந்தாலும் இன்று முதல் அதே மகாபாரதம் சீரியலை விஜய் டிவி இன்று முதல் மீண்டும் ஒளிபரப்பு செய்ய உள்ளதாக ப்ரோமோ வெளியிட்டு வருகிறது. சூரிய புதல்வன் கர்ணனனை குந்தி நதியில் விடுகிறார். என்னை மன்னித்துவிடு புதல்வனே என்று கூறி கண்ணீர் வடிக்கிறார். அடுத்து குந்தி தேவிக்கு கல்யாண ஏற்பாடுகள் நடக்கிறது. அப்போது பணிப்பெண் கூறுகிறாள், மகாராணி, மகாராஜாவிடம் தங்களை பற்றிய உண்மைகளை மறைத்து விடுங்கள் என்று அறிவுறுத்துகிறாள்.

சிம்பு குரலில் சூப்பர் ஸ்டார் ஆன்தெம்: ரசிகர்களிடம் தெறி ஹிட்!

என் தெய்வத்துக்கு இணையான என் பதி இடத்தில் நடந்த உண்மைகளை நான் எப்படி மறைப்பது என்று பதிலுக்கு கேள்வி கேட்டு கண்ணீர் வடிக்கிறார் குந்திதேவி. சத்தியம் உரைக்க மனம் உறுதி கொள்ளும்.. ஆனால், திருவாய் சத்தியத்தை உரைக்காது என்று கண்ணன் உபதேசம் செய்ய குந்தி உண்மையை மறைத்து விடுகிறார். குந்தி மறைத்து வைக்கும் ரகசியம். நிலை குலையும் அஸ்தினாபுரம் என்று மகாபாரதக் கதை பார்க்க பார்க்க ஒவ்வொரு முறையும் புது கருத்துக்களை உணர்த்துவதாக இருக்கிறது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Vijay Tv Tv Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment