கரண்ட விட இது பெரிய ஷாக்கா இருக்கே...

’அந்தாளுக்கென்ன புத்தி கித்தி கெட்டுப் போச்சா... இப்படியொரு காரியத்தை பண்ணிட்டு போய்ருக்காரு’ என ஆவேசமாகிறாள் மகா.

’அந்தாளுக்கென்ன புத்தி கித்தி கெட்டுப் போச்சா... இப்படியொரு காரியத்தை பண்ணிட்டு போய்ருக்காரு’ என ஆவேசமாகிறாள் மகா.

author-image
WebDesk
New Update
Tamil Serial News, Naam Iruvar Namakku Iruvar

நாம் இருவர் நமக்கு இருவர்

Tamil Serial News: கொரோனா தொற்று காரணமாக, முன்னணி சேனல்களில் ஒளிபரப்பாகி வந்த பல சீரியல்கள் நிறுத்தப்பட்டன. அதில் முக்கியமான ஒன்று, விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வந்த ’நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியல். இதில் செந்தில் இரு வேடங்களிலும், அவருக்கு ஜோடியாக ரக்ஹா ஹொல்லா, ரேஷ்மி ஜெயராஜ் என இரு கதாநாயகிகள் நடித்து வந்தார்கள். இந்த கொரோனா தொற்று சமயத்தில், ரக்‌ஷாவும், ரேஷ்மியும் வேறு மாநிலத்திலிருந்து சென்னைக்கு வந்து செல்வதில் தடங்கல் ஏற்பட்டது. இதனால் அந்த சீரியல் நிறுத்தப்பட்டது.

Advertisment

கோலிவுட்டை கலக்கும் இயக்குநர்-நடிகை ஜோடிகள்!

தற்போது ’நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலின் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் முதல் பாகத்தில் நடித்த செந்தில் ஹீரோவாகவும், ’சரவணன் மீனாட்சி’யில் நடித்து புகழ் பெற்ற ரச்சிதா ஹீரோயினாகவும் நடித்து வருகிறார்கள்.

Advertisment
Advertisements

தற்போது இதன் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. “இந்த விஷயத்தை கேட்டு தென் தமிழகமே அதிர்ந்துட்டு இருக்கு, நீ என்னன்னா இப்படி சாஃப்டா டீல் பண்ணிட்டு இருக்க” என்கிறான் மாயன். என்னவாக இருக்கும் என்பது போல முழிக்கிறாள் மகா. ”மாயனோட அப்பா, தன்னோட பல கோடி ரூபாய் சொத்த மகனுக்கே எழுதி வச்சிட்டாரு” என்கிறான் மாயனின் நண்பன். இதைக் கேட்டு ’ம்ம்ம்ம்ம் என்ன சொல்றீங்க’ என அதிர்ந்துப் போகிறாள் மகா. ‘இந்த ரியாக்‌ஷனுக்குத் தான் இம்புட்டு நேரம் வெயிட் பண்ணிட்டு இருந்தோம்’ என்கிறார்கள்.

‘தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினை வேண்டாம்’ – சூர்யா வேண்டுகோள்

’அந்தாளுக்கென்ன புத்தி கித்தி கெட்டுப் போச்சா... இப்படியொரு காரியத்தை பண்ணிட்டு போய்ருக்காரு’ என ஆவேசமாகிறாள் மகா. ’என்ன மகா சந்தோஷப் படுவன்னு பாத்தா, நீ இப்படி சொல்லிட்டு இருக்க’ என்கிறான் மாயன். ’இல்ல அதிர்ஷ்டம் எப்போதும் உருப்படாதவங்களுக்கு தான் அடிக்கும்ன்னு சொல்லுவாங்க, அது சரி தான் போல’ என மாயனை நோஸ் கட் செய்கிறாள் மகா. இவர்களின் கலாட்டாவை இன்று இரவு பார்க்கலாம்.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Tv Serial Vijay Tv

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: