Tamil Serial News: விஜய் டிவி-யில் தற்போது ’நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலின் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் முதல் பாகத்தில் நடித்த செந்தில் ஹீரோவாகவும், ’சரவணன் மீனாட்சி’யில் நடித்து புகழ் பெற்ற ரச்சிதா ஹீரோயினாகவும் நடித்து வருகிறார்கள். முன்னதாக ’நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலின் முதல் பாகம் ஒளிபரப்பப்பட்டு வந்தது. கொரோனா தொற்று நோயால், அதில் நடித்து வந்த ரக்ஷா மற்றும் ரேஷ்மி வேறு மாநிலத்தில் இருந்து சென்னைக்கு வந்து செல்வதில் இடையூறு ஏற்பட்டது.
சென்னையில் பிரபல ரவுடி என்கவுன்டரில் சுட்டுக் கொலை – பரபரப்பு
இந்நிலையில், சரவணன் மீனாட்சி சீரியல் முதல் பாகத்தில் ஹீரோவாக நடித்த செந்திலும், அடுத்தடுத்த பாகங்களில் ஹீரோயினாக நடித்த ரச்சிதாவும் தற்போது ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியல் இரண்டாம் பாகத்தில் இணைந்துள்ளனர். இந்த ஜோடி ரசிகர்களிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளனர்.
தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், ’அடடடடா... சில பொண்ணுங்களுக்கு அவங்க கட்டுற புடவைனால அழகா தெரிவாங்க. ஆனா நீ இந்த புடவையை கட்டுனதும், புடவைக்கே அழகு கூடியிருக்கு. ஆமா மகா திடீர்ன்னு இப்படி அம்மன் சிலை மாதிரி அலங்காரம் பண்ணிட்டு வந்துருக்கியே. என்ன விஷயம்?’ என்கிறான் மாயன். ‘இன்னைக்கு மொத முறையா வெளில போறோம். அதான் ஒரு நல்ல புடவைல போலாமேன்னு’ என்கிறாள் மகா. அதிர்ச்சி கலந்த சந்தோஷத்தில் மூழ்கிய மாயன், ஆங்.. ஆங் என மீண்டும் மீண்டும் அதை உறுதிப் படுத்திக் கொள்கிறான்.
ஆயுஷ் அமைச்சகத்தின் பெயரில் இருந்து, ‘எஸ்’ எழுத்தை நீக்கிவிடலாமா? – நீதிபதிகள் கேள்வி
‘ஆமா இன்னைக்கு மொத முறையா சேந்து வெளில போறோம்’ என மகா சொல்ல, ‘ஆமா கரெக்ட்டு.. இன்னைக்கு மொத முறையா சேந்து வெளில போறோம்’ என்கிறான் மாயன். ’ஆனா இந்த மாதிரி விஷயத்துக்கு எல்லாம் எப்போவும் நீ முடியாது, கூடாது, நடக்காதுன்னு எப்போவும் சொல்வியே?’ எனக் கேட்க, ‘எப்போவும் ஒரே மாதிரி நடந்துக்கனும்ன்னு எதாச்சும் இருக்கா என்ன? மனசுக்குப் பிடிச்சவங்கக் கூட சேந்து வெளில போறது ஒண்ணும் தப்பில்லையே?’ என்கிறாள் மகா. ’ஆங்.. இதெல்லாம் தப்பே கிடையாது’ என மாயன் கூற, சிரிக்கிறாள் மகா.
ப்ரோமோவைப் பார்க்கும் நமக்கு இதில் ஏதோ ட்விஸ்ட் இருப்பதாக தோன்றுகிறது. பொருத்திருந்து பார்ப்போம்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”