Vijay TV, Pandian Stores: கூட்டு குடும்பத்தில் இருந்தா இப்படியுமா கஷ்டப்பட வேண்டியிருக்கும்? பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இதை அழகாக காண்பித்து இருக்கிறார்கள். இதுவும் கூட ஒரு த்ரில் தான். பிறந்த நாளுக்கு வாங்கித் தந்த ஜிமிக்கியை முல்லை போட்டுக்கிட்டு வந்து நிற்கிறாள். கதிர் இதை பார்க்காமல் கடைக்கு கிளம்பறேன்னு சொல்றான். என்னங்க கிளம்பிட்டியளா என்று அங்கு வருகிறாள் முல்லை. எப்படியாவது அவன் வாங்கித் தந்த ஜிமிக்கியை காதில் போட்டு இருப்பதை கண்டு பிடித்து விட மாட்டானா என்கிற ஏக்கம் முல்லைக்கு.
ஸ்டான்லி மருத்துவமனையில் 17 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று ?
இதை கவனிக்காத கதிர்.. ஆமாம் என்று அசால்ட்டாக பதில் சொல்றான். ஒன்னும் இல்லை.. அது வந்து என்று ஜிமிக்கையை காண்பிப்பது போல் காதை சுற்றி விரலால் ஒரு வட்டமிட்டு... ஒன்னும் இல்ல என்று இழுக்கிறாள். என்ன ஒன்னும் இல்ல என்று மறுபடியும் கதிர் கேட்கிறான் இவர்களுக்கு நடுவில் கடைக்குட்டி கண்ணன் வேறு நிற்கிறான். இவன் தெரிந்து தான் இப்படி கேட்கிறானா.. இல்லை நிஜமாவே மக்கு மாதிரி கேட்கிறானா ஒண்ணும் புரியலை.
ம்ம்ம்.. இங்கே என்ன நடக்குது என்று கண்ணன் வேறு உஷாராகி ரெண்டு பேரையும் பார்க்கிறான். இவங்களை நம்ப முடியலியேடா... என்று நடிகர் விவேக் பாணியில் நிற்கிறான். முதல் நாள் முல்லைக்கு என்னை பிடிக்கலைன்னு சொல்றான். அடுத்த நாள் அவள் எங்கு போகிறாளோ அங்கெல்லாம் பார்த்துக்கொண்டு தன்னை மறந்து நிற்கிறான். எதை நம்புவது என்று குழப்பத்தில் நிற்கிறான் கண்ணன். ஏங்க.. ஒன்னும் தெரியலையா என்று முல்லை மறுபடியும் கேட்க, என்ன ஒன்னும் தெரியலையா என்று கதிர் மறுபடியும் கேட்கிறான். பின்னே அவன் பக்கத்தில் நிற்கும் கண்ணனை பார்த்து பார்த்து ஒவ்வொரு வார்த்தையும் பேசுகிறான் என்றால், தெரிந்ததுதானே முல்லையை போட்டு பார்க்கிறான்...!
க்யூட் ராஷ்மிகா மந்தனா: கார்ஜியஸ் ஸ்ருதி – புகைப்படத் தொகுப்பு
முல்லை.. அதற்கும் சளைக்காமல் முகத்தை இப்படி அப்படி அசைத்து, ஜிமிக்கியை காண்பிக்க முயற்சி செய்ய, கடுப்பாகி போகிறான் கண்ணன். ஆமாம்.. இப்போ எதுக்கு நீங்க மூஞ்சிய மூஞ்சிய ஆட்டிகிட்டு இருக்கியன்னு முல்லை அண்ணியைப் பார்த்து கேட்கிறான். இல்லடா என்கிட்டே ஒன்னும் வித்தியாசம் தெரியலை என்று கேட்கிறாள் முல்லை. ஆங்.. கண்டு பிடிச்சுட்டேன்னு கண்ணன் சொல்ல, சரி இவனாவது கண்டு பிடிச்சு சொல்லி, கதிர் மண்டைக்கு அப்படியாவது உரைக்கட்டும்னு சொல்லுடா பார்ப்போம் என்று சொல்கிறாள். ஆங் என்று உற்சாகமாக எனக்குத்தெரியும் என்பது போல ஆரம்பித்த கண்ணன் அதே வேகத்தில் ஒன்னும் தெரியலை என்று சொல்லி, முல்லையின் கோபத்துக்கு ஆளானான்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”