Tamil Serial News: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் பிரபலமானது பாண்டியன் ஸ்டோர்ஸ். மற்ற தொடர்களை விட இந்தத் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. இதில் கதிராக குமரனும், முல்லையாக சித்ராவும் நடித்து வருகின்றனர்.
பப்ளி டூ ஸ்லிம் அண்ட் ட்ரிம்: தமிழ் நடிகைகளின் ஆச்சர்ய வெயிட் லாஸ்!
மூர்த்தியின் மூத்த தம்பி ஜீவாவுக்கு தனது மாமா மகள் முல்லையுடன் திருமணம் ஏற்பாடு செய்யப்படுகிறது. ஆனால் ஜீவாவோ முதலாளி பெண் மீனாவை காதலிக்கிறான். இதனால் அவனது தம்பி கதிரை, திருமணம் செய்துக் கொள்கிறாள் முல்லை. முதலில் இருவருக்கும் பிடிக்காமல் இருந்தாலும், போகப் போக புரிதல் உண்டாகிறது. தற்போது ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ள சீரியல் ஜோடிகளாக கதிரும், முல்லையும் மாறியிருக்கிறார்கள். இவர்கள் பெயரில் சமூகவலைதளத்தில் ஆர்மிக்களும் உருவாகியுள்ளன.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடந்த வாரம் வட்டிக்கு கடன் கொடுத்த நபர் ஒருவர் தன் மனைவி மற்றும் குடும்பத்தாரை அநாகரிகமாக பேசியதால் கதிர் அவரை அடித்தார். பதிலுக்கு அடி வாங்கிய நபர் போலீசில் புகார் கொடுக்கவே போலீஸ் கதிரை அடித்து காவலில் வைத்தனர். கதிரை மீட்க பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் படாதபாடு பட்டது. அந்த நேரத்தில் முல்லை உட்பட மொத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமும், கதிருக்காக அழுது புலம்பியது, பார்வையாளர் மனதை ஏதோ செய்தது. தமது குடும்பத்தில் நடந்த சம்பவமாக ரசிகர்கள் அதனைப் பார்த்தனர்.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், கேட்டை திறந்து மூர்த்தியும், ஜீவாவும் வெளியில் வருகிறார்கள். அங்கே வட்டிக்கு கடன் கொடுத்த அந்த நபர் நிற்கிறார். அவரிடம் பணத்தைக் கொடுத்த மூர்த்தி, “உங்கக் கிட்ட கடன் வாங்குனா, அதுக்கு எங்க வீட்டு பொம்பளைங்கள தப்பா பேசுவீங்களா நீங்க? நாங்க அப்படி உங்கள பேசுனா உங்களுக்கு கோவம் வராதா? அதே தான என் தம்பி கதிருக்கும் நடந்துச்சு. இப்ப பணத்த கொடுத்தாச்சு. அப்ப நீங்க தப்பா பேசுனீங்கள்ல, அதுக்கு இப்ப நீங்க என் தம்பி கதிரு கிட்ட மன்னிப்பு கேக்கணும்” என்கிறார். அந்த நேரம் கேட்டை திறந்துக் கொண்டு கதிர் வெளியே வருகிறான்.
’தமிழகத்தின் முதல் பெண் ஆம்புலன்ஸ் டிரைவர்’ வீரமான வீரலட்சுமி!
“மன்னிச்சிரு தம்பி. வீட்டு பொம்பளைங்கள அப்படி பேசுனது தப்பு தான். மன்னிச்சுருங்க” என்கிறார் வட்டிக்காரர். பொதுவாக நெகட்டிவ் கதாபாத்திரங்கள் அவ்வளவு எளிதாக மாறாது. வில்லத்தனம், வன்மம், பழிவாங்குதல் என அதன் நிறம் மாறிக் கொண்டே இருக்கும். ஆனால் இந்த வட்டிக்காரர் உடனே மன்னிப்பு கேட்டது, பின்னாடி பெரிய வெடிகுண்டு இருப்பதை குறிப்பால் உணர்த்துகிறது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”