Tamil Serial News: விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகிய ‘ராஜா ராணி’ சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ஒன்று. அதில் செம்பாவாக ஆல்யா மானசாவும், கார்த்திக்காக சஞ்சீவும் நடித்திருந்தார்கள். சீரியல் முடிந்த சில நாட்களில், நிஜ வாழ்க்கையிலும் இவர்கள் ஜோடியானார்கள். தற்போது இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.
24 மணி நேரமும் இந்த வசதி உங்களுக்காக.. கலக்கும் பிரபல வங்கியின் ஏடிஎம் சேவை!
இந்நிலையில் ராஜாராணி சீரியலின் இரண்டாம் பாகம் தற்போது விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஹீரோவாக கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வந்த, ‘திருமணம்’ சீரியலின் ஹீரோ சித்து நடிக்கிறார். ஹீரோயினாக முதல் பாகத்தில் நடித்த ஆல்யா மானசாவே நடிக்கிறார்.
விஜய் டிவி-யில் ஏற்கனவே ஒளிபரப்பான டப்பிங் சீரியலான ‘என் கணவன் என் தோழன்’ சீரியலின் ரீமேக் தான் ராஜா ராணி. ஐபிஎஸ் ஆக வேண்டும் என்ற கனவோடு இருக்கும் பெண் சந்தியா. அவருக்கு பணக்கார மாப்பிள்ளையாக ஒருவரை பார்க்கிறார் அவரது அண்ணன். ஆனால் படித்து ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டும் என்பதால், இப்போது கல்யாணம் வேண்டாம் என்று சொல்லி மறுக்கிறார் சந்தியா. மறுபுறம் ஹீரோ சரவணன் ஸ்வீட் கடை வைத்திருக்கும் பொறுப்பான பையன்.
சரவணனுக்கு வேறொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்து, கல்யாண பத்திரிக்கை எழுத சொல்லும் போது அவனது தம்பி மனைவி அர்ச்சனா செய்த தவறினால் சந்தியாவின் பெயர் மணப்பெண்ணின் பெயராகிறது. அதை கவனிக்காமல் எடுத்துக் கொண்டு குடும்பத்தோடு கோவிலுக்கு போகிறார் சரவணன். அங்கே சந்தியாவும் குடும்பத்தோடு வர நாயகன், நாயகியின் சந்திப்பு நிகழ்கிறது.
திருமண பிஸியில் இருக்கும் சரவணனிற்கு லட்டு ஆர்டர் கிடைக்க, அங்கு செல்லும் போது பார்க்கில் படித்துக் கொண்டிருக்கும் சந்தியாவை பார்த்து ஆச்சரியப்பட்டு ஒரு ஸ்வீட் பாக்ஸை அவருக்கு தெரியாமல் அருகில் வைத்து விட்டு செல்கிறார்.
தனி ஆளா கேப்ரியல்லாவுக்கு ஆதரவு தந்த சுரேஷ் சக்ரவர்த்தி!
வீட்டில் பத்திரிக்கையை பிரித்து பார்க்கும் போது பூகம்பம் வெடிக்கிறது. காரணம், பெண்ணின் பெயர் சந்தியா என்று மாறியிருப்பது அப்போது தான் தெரியவருகிறது. அதைப் பார்த்த சரவணனின் அம்மாவிற்கு கோபம் வந்து பத்திரிக்கையை அர்ச்சனாவின் முகத்தில் வீசி அடிக்கிறார். பத்திரிக்கையில் ஒன்று சேர்ந்த சரவணன் - சந்தியா வாழ்க்கையில் இணைவார்களா? போகப்போக பார்ப்போம்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”