ஷாக்… கண்ணம்மாவை விட விஜய் டிவியில் இந்த சீரியல் ‘டாப்’பாமே… நம்புறீங்களா?

Vijay TV Serials : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் டிஆர்பி ரேட்டிங் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Vijay TV Serial TRB Rating Update : தமிழில் அதிக சீரியல்களை ஒளிபரப்பும் முக்கிய டிவிகளில் ஒன்று விஜய்டிவி. இதில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், சீரியலின் தினசரி எபிசோடுகள் பல வகைகளில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் விஜய் டிவியில் அவ்வப்போது புதிய சீரியல்கள் ஒளிபரப்பாவதும், பழைய சீரியல்கள் திடீரென நிறுத்தப்படுவதும் தொடர்ந்து வருகிறது.

இது ஒருபுறம் இருக்க மறுபுறம் என்னதான் புதிய சீரியல்கள் ஒளிபரப்பானாலும், ஒரு சில பழைய சீரியல்களுக்கு ரசிகர்கள் தங்களது பெரும் ஆதரவை தொடர்ந்து வருகன்றனர். இதில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு வாரந்தோறும் டிஆர்பி ரேட்டிங்வெளியாவது வழக்கம். இதில் அதிக பார்வையாளர்கள் பெற்ற சீரியல் முதலிடம் பிடித்து வரும்நிலையில், கடந்த சில வாரங்களாக பாரதி கண்ணம்மா சீரியல் முதலிடத்தில் இருந்து வந்தது.

பல ஆண்டுகளாக பிரிந்து வாழும் பாரதி கண்ணம்மா இடையே மீண்டும் காதல் துளிர்விடும் வகையில் கதைக்களம் அமைக்கப்பட்டதால் இந்த சீரியல் டிஆர்பியில் அதிக ரேட்டிங் பெற்றது. ஆனால் தற்போது இந்த நிலை மாறி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் விஜய்டிவியின் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. இதில் பாரதி கண்ணம்மா 12.3 புள்ளிகள் பெற்ற நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 12.4 புள்ளிகள் பெற்று முதலிடத்திற்கு வந்து இருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸில் கண்ணன் ரகசிய திருமணம் செய்து கொண்டது அதற்கு பிறகு நடைபெற்ற சம்பவங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதால் இந்த சீரியல் முதலிடம் பெற்றுள்ளது. இதில் மூன்றாம் இடத்தில் பாக்கியலட்சுமி மற்றும் நான்காம் இடத்தில் ராஜா ராணி 2 ஆகிய சீரியல்கள் இருக்கின்றன. புதிய சீரியலான தமிழும் சரஸ்வதியும், நாம் இருவர் நமக்கு இருவர், மௌன ராகம் ஆகிய சீரியல்கள் அதற்கடுத்த இடங்களில் இருக்கின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial news vijay tv serials trb rating update

Next Story
Vijay TV Serial : பிரஷாந்தை நினைத்து பயப்படும் கதிர் : கண்ணனுக்கு ஆபத்து வருமா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com