Vijay TV Serial : தேன்மொழி பிஏ சீரியலில் ஹீரோ சார்னு தேன்மொழி தூர இருந்து ரசிச்ச காலம் போயே போச்சு. இப்போ பாருங்க, கும்மிருட்டு, வீட்டில் யாருமே இல்லை. அருளு ரூமுக்குள்ளே. அருளும் அவளும் மட்டும். தேனுவை பழி வாங்கறேன்னு மதர் இன் லா தேனுவை மட்டும் வீட்டில் வச்சு பூட்டறோம்னு நினைச்சு வீட்டை பூட்டிட்டு அன்னம் தண்ணி, கரண்ட் இல்லாம கஷ்டப்படுடின்னு வெற்றி களிப்பில் கிளம்பிட்டாங்க. ஆனால், முக்கியமான பிராபர்டி அருள்வேலு. தேனுவின் ஆசை கணவன், காதல் ஹீரோ உள்ளே மாட்டிகிட்டு இருக்கான்.
ரூ. 2 லட்சம் மானியம் உடனே வேண்டுமா – அரிய வாய்ப்பு : இணையுங்கள் PMAY CLSS திட்டம்
ஹீரோ சார் தூரத்தில் இருந்தாலே பார்த்து ஜொள்ளு விட்டுகிட்டு நிப்பா தேனு. இப்போ பக்கத்துல தனியா ஹீரோ மாட்டிகிட்டு இருக்கான். சோறாவது, தண்ணியாவது, கரண்டாவது! கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும் ஹீரோவை பார்த்து பார்த்து ரசிக்கலாம். தேனு ஹீரோயின் கணக்கா சீன் போட, இருட்டில் மெழுகுவர்த்தி ஏத்திக்கிட்டு அவன் முன்னால் வந்து நிற்கிறாள். மாட்டிக் கொண்ட திருடன் மாதிரி ஜன்னலை பார்த்து அப்பத்தா அப்பத்தா, அம்மா அம்மா என்று அருள் கூப்பிட. மெழுகுவர்த்தியுடன் வந்த தேன்மொழியை பார்த்து சப்த நாடியும் ஒடுங்கி நின்னுட்டான் நம்ம ஹீரோ. ஹீரோ சார்.. என்ன அப்படி பார்க்கறீங்க என்று கேட்கிறாள்.
23, 2020
ஒன்னும் இல்லை என்று அவன் தலையை ஆட்டுகிறான். சிலர் கெட்டது செய்யணும் செய்யணும்னே திட்டம் போட்டு வாழ்ந்துகிட்டு வந்தாலும், அவங்களையும் அறியாம சில நல்லதுகளையும் செய்து விடுகிறார்கள். இங்கே கொரோனா பயத்துல ஊர்தான் லாக் டவுன் ஆகிக் கிடக்கு. இந்த மதர் இன் லா வீட்டுக்குள்ள மகனையும் மருமகளையும் வச்சு வசதியா லாக் டவுன் பண்ணி புண்ணியத்தை கட்டிக்கிட்டாங்க. வந்து பார்த்து வாயிலும் வயிற்றிலும் அடிச்சுக்கிட்டு புலம்பினாலும் தேனுவும், அருள் வேலுவும் தனியா இரவை கழிச்சது கழிச்சதுதானே...!
தனிமைப்படுத்தப்படும் இந்திய தலைநகர்… எல்லைகள் மூடப்படுகிறது!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"