இந்தியாவில் கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், தனிப்படுத்துதல் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. தனி மனிதர்கள், தனி வீடு, தனி ஊர், தனி மாவட்டங்கள் என்று பிரிக்கப்பட்டு இறுதியாக தனித்தனி மாநிலங்களாக தனியாகவும், கூட்டாகவும் கொரோனாவுக்கு எதிராக போராடி வருகின்றனர். ஏற்கனவே தமிழக, கேரள எல்லைகள் மூடப்பட்டது. புதுவையில் ஊரடங்கு உத்தரவு, கர்நாடகாவிலும் இதே நிலை என்று இருக்க, இன்று காலையில் இருந்து டெல்லியை தனிமைப்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது.
நொய்டாவில் இருந்தும் டெல்லியில் இருந்தும் அவரச தேவைகளுக்காக வெளியேறும் நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. டெல்லியில் இருந்து நொய்டாவிற்கு செல்லும் நபர்களை தீவிரமாக கண்காணிக்கிறது உத்திரப்பிரதேச மாநில காவல்துறை. அதே போன்று, நொய்டாவில் இருந்து டெல்லி வரும் நபர்களை கண்காணிக்கிறது டெல்லி காவல்துறை. இந்நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது இந்தியன் எக்ஸ்பிரஸ் புகைப்படக் கலைஞர் அபினவ் ஷாஹா எடுத்தப் புகைப்படங்கள் கீழே!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
கிழக்கு டெல்லியின் எல்லையான டெல்லி காஜிபூரி பகுதிகளும் இன்று காலை டெல்லி காவல்துறையால் மூடப்பட்டது. இந்த நிகழ்வின் போது இந்தியன் எக்ஸ்பிரஸ் புகைப்படக் கலைஞர் பிரேம் நாத் பாண்டே எடுத்த புகைப்படங்கள் இதோ!
அவசர பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள், முக்கிய சேவைகளுக்காக இயக்கப்படும் வாகனங்கள் தவிர மற்ற வாகனங்களுக்கு முழுமையாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அதே போன்று தேசிய நெடுஞ்சாலை 24 எண்ணின் அருகே அமைந்திருக்கும் காஜியாபாத் எல்லைகளும் மூடப்பட்டது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook
Web Title:Coronavirus outbreak delhi noida borders are sealed
கோவாக்சின் இங்கிலாந்து மாறுபாட்டிற்கு எதிராக செயல்படுகிறது – ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை
குடியரசு தின வன்முறை எதிரொலி : 25 எஃப்.ஐ.ஆர்கள், 30 விவசாயத் தலைவர்கள் மீது வழக்கு!
‘நம்ம ஷிவானி எங்கே காணோம்?’ – வைரலாகும் பிக் பாஸ் கொண்டாட்ட புகைப்படங்கள்
Tamil News Today Live : ஜெயலலிதாவின் போயஸ் நினைவு இல்லத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார் !