Thenmozhi BA: விஜய் டிவியின் தேன்மொழி பி.ஏ, ஊராட்சி மன்றத் தலைவர் சீரியல், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அதில், தேன்மொழியாக ஜாக்குலின் நடித்துள்ளார். கணவன் அருளை ஹீரோ சார் என்று கூப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். தேன்மொழி ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பதால், அவளை மகன் அருளுக்கு பிடிக்காமல் கல்யாணம் செய்து வைக்கிறார் அவனது தந்தை. அவள் காந்திநகர் காரி என்று வீட்டுக்குள் முதலில் அனுமதிக்க மறுக்கிறார் அவனது அம்மா.
ரசிகர்களைக் கவர்ந்த 90-ஸ் நடிகைகள்: இப்போதும் பலரின் ஃபேவரிட் ஸ்டார்ஸ் தான்!
இருந்தாலும், தேன்மொழிக்கு அருள் என்றால் கொள்ளை பிரியம். திருமணத்துக்கு முன்பிருந்தே அவன் மேல் தேன்மொழிக்கு ஒருதலை காதல் இருந்தது. திருமணத்துக்கு பிறகு அந்த காதல் இன்னும் அதிகமாகிறது. தேன்மொழியை புரிந்துக் கொண்ட, அருளின் பாட்டி அவளுக்கு பக்க பலமாக இருக்கிறார். அவ்வப்போது அவளுக்கு ஐடியா தந்து அசத்துகிறார். இருப்பினும் மருமகளை பழி வாங்க வேண்டும் என்று துடிக்கும், அருளின் அம்மா, கிடைக்கிற கேப்பில் எல்லாம், கிடா வெட்டுகிறார்.
தேன்மொழி தன் மீது வைத்திருக்கும் அன்பை, அருள் புரிந்துக் கொண்டாலும், அதற்கு பின் இருக்கும் சூழ்ச்சி தனக்கு தெரியும் என்பதால், விலகியே இருக்கிறான் அருள். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், மயங்கி விழுகிறாள் அருளின் அக்கா. அவளை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். அங்கு வரும் அக்கா கணவரிடம், அவளுக்கு அபார்ஷன் ஆகி விட்டது, என்கிறான் அருள். வாயடைத்துப் போகிறார் அருளின் அம்மா. ‘தேன்மொழி வயித்துல வளர்ற கருவும் நம்ம வீட்டு வாரிசு தான. அத போய் கொல்ல நெனச்ச பாவத்துக்கு, இப்போ என்னாச்சு பாத்தியா?’ என்கிறது அவரது மனசாட்சி.
லேட்டா வந்தா பிடிக்காது… கிட்ஸ் ரூம் கிளினீங்.. மே மாசத்தில் நோ ஷூட்டிங்.. பலரும் பார்த்திடாத ஜோ!
’பெத்த பொண்ணோட கருவ கலைச்சிட்டியே டி... பாவி... பாவி... பாவி...’ என தலையில் அடித்துக் கொள்கிறார். மாமியார் திருந்தி விட்டால், பெரிதாக ஈர்க்காது. தேன்மொழி பி.ஏ தொடரில் அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”