Tamil Serial News: தேன்மொழி ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பதால், அவளை மகன் அருளுக்கு பிடிக்காமல் கல்யாணம் செய்து வைக்கிறார் அவனது தந்தை. அதன் பிறகு அருளுக்கு அவளைப் பிடித்ததா? தேன்மொழியை அருளின் குடும்பம் என்னவெல்லாம் செய்கிறது என்பது தான், ‘தேன்மொழி பி.ஏ’ சீரியலின் கதை.
மலையாள தேசத்து அழகிகள்: ஓணம் கொண்டாட்ட படங்கள் இங்கே!
விஜய் டிவியின் தேன்மொழி பி.ஏ, ஊராட்சி மன்றத் தலைவர் சீரியல், மூலம் தொகுப்பாளினியாக இருந்த ஜாக்குலின், சீரியல் ஹீரோயினாகியிருக்கிறார். இவர் விஜய் டிவி-யின் பிரபல நிகழ்ச்சியான ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானார் ஜாக்குலின். தற்போது சீரியல் மட்டுமல்லாமல், சினிமாவிலும் தலை காட்டி வருகிறார். தேன்மொழி சீரியலில் தனது கணவன் அருளை, ஹீரோ சார் என்று கூப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
தேன்மொழிக்கு அருள் என்றால் கொள்ளை பிரியம். திருமணத்துக்கு முன்பிருந்தே அவன் மேல் ஒருதலை காதல் இருந்தது. திருமணத்துக்கு பிறகு அந்த காதல் இன்னும் அதிகமாகிறது. தேன்மொழியை புரிந்துக் கொண்ட, அருளின் பாட்டி அவளுக்கு பக்க பலமாக இருக்கிறார். அவ்வப்போது அவளுக்கு ஐடியா தந்து அசத்துகிறார். இருப்பினும் மருமகளை பழி வாங்க வேண்டும் என்று துடிக்கும், அருளின் அம்மா, கிடைக்கிற கேப்பில் எல்லாம், கிடா வெட்டுகிறார். இருந்தாலும் அதைப்பற்றியெல்லாம் தேன்மொழி அலட்டிக் கொள்வதே இல்லை.
படபிடிப்புக்கு அனுமதி: ரஜினி, கமல் படங்களின் ஷூட்டிங் எப்போது?
தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், அருளுக்கு ஃபோன் வருகிறது. அப்போது, “கொடைக்கானலுக்கு இன்னொரு நாள் போகலாம். இப்போ என்னால வர முடியாது. எனக்கும் உன்ன பாக்கணும், உன் கூட டைம் ஸ்பெண்ட் பண்ணனும்னு தான் இருக்கு லக்ஷ்மி. இப்ப நான் என்ன பண்றது. இங்க சூழ்நிலை சரியில்ல. ஆக்சுவலி உன்ன மாதிரி கூப்ட்ட இடத்துக்கு எல்லாம் என்னால வர முடியாது. எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு. என் பொண்டாட்டிக்கு எதுவும் தெரியாது. ஐ எம் எக்ஸ்ட்ரீம்லி சாரி டா” என்கிறான். இதைக் கேட்ட தேன்மொழி, “அடப்பாவி மனுசா, நல்லவன் மாதிரி இருந்துக்கிட்டு லக்ஷ்மின்னு ஒருத்தி கூட கடலை போட்டுக்கிட்டு இருக்கீங்களா? கொடைக்கானலுக்கு போகப் போறிங்களா? இந்த கண்றாவிய பொண்டாட்டிக்கு தெரியாதுன்னு, அவ கிட்டயே சொல்றீங்களா? ச்சே ஹீரோ சார்... நீங்க ஆண்டிஹீரோவா மாறுவீங்கன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பாக்கல” என்கிறாள்.
யார் அந்த லக்ஷ்மி, அருளின் நண்பனா? தோழியா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”