vj chitra acted in sun tv serial : விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து அனைவரின் மனதிலும் இடம்பிடித்தவர் நடிகை சித்ரா. கடந்த 2013-ம் ஆண்டு மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சட்டம் சொல்வது என்ன என்ற நிகழ்ச்சியின் மூலம் வீஜே-வாக தனது சின்னத்திரை பயணத்தை தொடங்கிய சித்ரா, அதன்பிறகு 2014-ல் ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மாமன் மகள் என்ற தொடரின் மூலம் சீரியலில் அறிமுகமானார்.
அதன்பிறகு சில தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த அவர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் நடித்தார். இறுதியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து புகழின் உச்சிக்கு சென்றார். இந்த சீரியலில், குமரன், முல்லை ஜோடிக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளங்கள் உள்ளன. இந்நிலையில், கடந்த டிசம்பர் 9-ந் தேதி சென்னையில் விடுதி ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இவரின் மரணம் சின்னதிரையுலகில் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இவரது மரணம் தொடர்பான மர்மம் தற்போது வரை நீடித்து வரும் நிலையில், இந்த மரணம் தொடர்பாக அவரது காதல் கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் இந்த வழக்கில், தினந்தோறும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆனாலும் சித்ராவின் மரணம் கொலை தற்கொலையா? என்பது குறித்து இன்னும் யூகிக்க முடியாத ஒன்றாக உள்ளது.
இந்நிலையில் சித்ரா என்றாலே விஜய் தொலைக்காட்சி மற்றும் மக்கள் தொலைக்காட்சிதான் நினைவுக்கு வரும். ஆனால் சித்ரா தனது 2-வது சீரியலை சன் தொலைக்காட்சியில் தொடங்கியுள்ளார் என்பது பலருக்கும் தெரியாத உண்மை. கடந்த 2014-முதல் 2018-ம் ஆண்டுவரை சன்டிவிலியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா பெரிய பாப்பா என்ற தொடரில் நடித்துள்ளார். நளினி, நிரோஷா, எம்.எஸ்.பாஸ்கர், மதுமிதா ஆகியோர் நடித்துள்ள இந்த சீரியலில், விஜே சித்ராவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:Tamil serial news vj chitra act in sun tv serial