Bharathi kannama serial news updates in tamil: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. கண்ணம்மா கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு நகர்ந்து வரும் இந்த சீரியலில் கண்ணம்மாவாக வாழ்ந்து வந்த நடிகை ரோஷினி ஹரிப்ரியன் தற்போது விலகுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இவரின் இந்த திடீர் முடிவால் சீரியல் ரசிகர்கள் அதிர்ச்சி ஆழ்ந்துள்ளனர்.

பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து நடிகை ரோஷினி ஹரிப்ரியன் விலகியுள்ள நிலையில் அவருக்கு பதில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒருவரை சீரியல் குழு தேடியது. கண்ணம்மாவாக நடிப்பவர் கருப்பு நிற கதாநாயகியாக இருக்கக்கூடியவராக இருக்க வேண்டுமென்பதால் அவரை தேர்ந்தெடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள நடிகையை சீரியல் குழு தேர்வு செய்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர், ஜீ தமிழில் ஒளிபரப்பாகிய ‘யாரடி நீ மோகினி’ சீரியலில் கதாநாயகியாக நடித்த ‘நட்சத்திரா’ தான். இந்த சீரியலில் வெண்ணிலாவாக நடித்த நட்சத்திராவிற்கேன தனி ரசிர்கள் உள்ளனர்.
தவிர, பாரதிகண்ணம்மா சீரியலில் ஹேமா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ‘லிசா’ குழந்தை நட்சத்திரத்துக்கு இவர் அம்மாவாக இந்த சீரியலில் நடித்து இருந்தார். இதில் இருவருக்கும் பக்கா கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி ஏகப்பட்ட டப்ஸ்மாஷ் வீடியோக்களை பதிவிட்டு லைக்ஸ்க்களை குவித்து இருந்தனர்.
தற்போது இவர்கள் மீண்டும் இணைவது சீரியலுக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். எனவே, பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்கள் ரோஷினி விலகி இருந்தாலும் அவருக்குப்பின் சீரியலில் நிகழ உள்ள மாற்றத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
கண்ணம்மாவாக ரோஷினி நிறைய காட்சிகளை நடித்து முடித்துவிட்டதால் அவை அனைத்தும் ஒளிபரப்பு செய்த பிறகு தான் நட்சத்திரா கண்ணம்மாவாக நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“