/tamil-ie/media/media_files/uploads/2021/02/harija.jpg)
Youtube Actress Harija Good News : உலகளவில் தற்போது தொழில்நுட்ப வசதிகள் அசுர வளர்ச்சியடைந்து வருகிறது. இதில் யூடியூப் முக்கிய பங்கு வகித்து வரும் நிலையில், பாமர மக்கள் தொடங்கி தொழில் அதிபர்கள், சினிமா பிரபலங்கள் என பலதரப்பினராலும் இந்த யூடியூப் தளம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் சினிமா வாய்ப்பு தேடி வரும் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் தங்களது நடிப்புத்திறனை வெளிப்படுத்த யூடியூப் தளம் பெரும் உதவி செய்து வருகிறது. இந்த தளத்தின் உதவியுடன் பல கலைஞர்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளனர்.
அந்த வகையில், யூடியூபில் உள்ள எருமை சாணி சேனலில் நடித்து புகழ்பெற்ற ஹரிஜா வலைதளவாசிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றார். அவருகென்று தனியாக ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ள நிலையில், இந்த சேனலில் பதிவிடப்படும் ஒவ்வொரு வீடியோவின் இறுதியிலும் அவர் நடிகர் விஜய்யை பார்த்து "போடா எரும சாணி" என்று திட்டுவது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இவர் பூர்வீகம் கேரளா என்றாலும் தமிழகத்தில் ஊட்டி மற்றும் கோயம்புத்தூரில் தான் வளர்ந்துள்ளார்.
யூடியூப் சேனலில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ள அவர், 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' என்ற படத்திலும் நடித்திருக்கிறார். இந்நிலையில் தன்னுடன் ஒரு குறும்படத்தில் இணைந்து நடித்த அமர் என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்ட ஹரிஜா திருமணத்துக்குப் பிறகு எருமை சாணி சேனலில் அவர் நடிக்கவில்லை. இதனால் அவரது ரசிகர்கள், பெரும் ஏமாற்றம் அடைந்த நிலையில், தற்போது நடிகை ஹரிஜா தனது ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார்.
அதில் தற்போது தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ள அவர், தனது கணவருடன் எடுத்துக்கொண்ட அழகிய வளைகாப்பு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.