Tamil Serial News: சீரியல் என்றால் அதன் கதாநாயகி சேலை, சுரிதார் போன்ற உடைகளில் பெரும்பாலும் பவ்யமாக தான் இருப்பார்கள். ஆனால் பாய் கட் ஹேர் ஸ்டைல், பேண்ட் ஷர்ட் என அந்த ரூல்ஸை பிரேக் செய்திருக்கிறார், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், ‘சத்யா’ சீரியலின் கதாநாயகி ஆயிஷா!
பாண்டியன் ஸ்டோர்ஸ்: இந்த அடக்கத்துக்கு பின்னாடி ஒரு ஆப்பு இருக்கும் போலயே…
தேவதையை போல ஆயிஷா
சத்யா தொடரில் ’டாம் பாயாக’ நடித்து வருகிறார் ஆயிஷா. இவர் முதன் முதலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான`பொன்மகள் வந்தாள்’ சீரியலில் தான் நடித்துக் கொண்டிருந்தார். அந்த சீரியலில் ஆயிஷாவுக்கும், இயக்குனருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக அந்த தொடரில் இருந்து அவர் விலகினார். அதன் பின்பு ’மாயா’ என்ற சீரியலில் நடிக்க தொடங்கினார் . அந்த தொடர் மூலம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார். அந்த சீரியல் முடிவுக்கு வந்ததும் ‘சத்யா’ தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடரில் ஆயிஷா ஆணாக நடித்து பெண்களுக்கு இருக்கும் தனம்பிக்கையை வலுப்படுத்தும் படி நடிக்கிறார்.
கேரளாவில் பிறந்து வளர்ந்த ஆயிஷா, சென்னையில் உள்ள பிரபல கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார். அப்போது தான் அவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. முதல் சீரியலிலேயே, ‘பொன்மகள் வந்தாள் ரோகினி’ என குறிப்பிடும் அளவுக்கு ரசிகர்களிடம் பிரபலமானார். அதன் பின்னர் சன் டிவி-யின் ‘மாயா’, தற்போது ‘சத்யா’ என பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார். நீள்வட்ட முகம், இன்னசெண்டான கண்கள் என ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருக்கிறார்.
வைப்ரண்ட் லுக்கில் சத்யா (என்கிற) ஆயிஷா
சத்யா தொடரில் ஆயிஷாவுடன் நடிக்கும் விஷ்ணுவிற்கும் அவருக்கும் காதல் என்று பல கிசுகிசுக்கள் பரவி வருகின்றன. ஆனால் அது எந்த அளவிற்கு உண்மை என்று இன்னும் தெரியவில்லை. இதற்கு தாங்கள் இருவரும் பெஸ்ட் பிரெண்ட் என்பதே இருவரின் பதில். சீரியலில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் சின்ன ரோலில் நடித்திருக்கிறார் ஆயிஷா. நடிகர் சந்தானத்துடன் தில்லுக்கு துட்டு 2 படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்திருக்கிறார்.
பட வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கும் ஆயிஷா அதற்கான முக்கிய முயற்சியாக, தனது விதவிதமான படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். இவரை சின்னத்திரை திரிஷா என ரசிகர்கள் செல்லமாக அழைக்கிறார்கள். டாம் பாய் கெட்டப்பில் சீரியலில் நடித்து போரடித்து விட்டதால், அசத்தலான போஸ் கொடுத்து போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.
கறுப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு...
தற்போது ஆல்பம் பாடல்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார் ஆயிஷா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புகழ்பெற்ற தர்ஷனுடன் இணைந்து ஒரு ஆல்பத்தில் கலக்கியுள்ளார். இந்த பாடலை சித்ஸ்ரீராம் பாடி இருக்கிறார். அந்த பாடல் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
கீர்த்தி சுரேஷின் குடும்ப உறுப்பினர்கள் இவர்கள் தான் வைரலாகும் புகைப்படங்கள்!
நடிப்பை தவிர மற்ற நேரங்களில் டான்ஸ் ஆடுவது, பாடல்கள் கேட்பது, வித்தியாசமான உணவுகளை ஒரு கை பார்ப்பது என பம்பரமாய் சுழல்கிறார் ஆயிஷா!
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”