ஒரே நேரத்தில் 2 சீரியல்களை நிறுத்தும் பிரபல சேனல்: ரசிகர்கள் ரியாக்ஷன் என்ன?

Official announcement; Zee Tamil’s Oru Oorla Oru Rajakumari and sathya serials ending by oct.24th Sunday Tamil News: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'சத்யா மற்றும் ஒரு ஊர்ல ராஜகுமாரி' சீரியல்கள் நிறுத்தப்பட உள்ளதாக அதன் அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளது ஜீ தமிழ்.

Official announcement; Zee Tamil’s Oru Oorla Oru Rajakumari and sathya serials ending by oct.24th Sunday Tamil News: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'சத்யா மற்றும் ஒரு ஊர்ல ராஜகுமாரி' சீரியல்கள் நிறுத்தப்பட உள்ளதாக அதன் அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளது ஜீ தமிழ்.

author-image
WebDesk
New Update
Tamil serial news: zee tamil’s Oru Oorla Oru Rajakumari and sathya serials ending

Sathya Tamil serial news: தமிழில் சீரியல்களை ஒளிபரப்பு செய்துவரும் முன்னணி தொலைக்காட்சியாக ஜீ தமிழ் தொலைக்காட்சி உள்ளது. இந்த தொலைக்காட்சியில் கடந்த 2019ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் சீரியல் சத்யா. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியல் காதல் மற்றும் ஆண் இயல்பு கொண்ட பெண்ணான சத்யாவின் வாழ்வை மையமாக கொண்டது. இதில் ஆயிஷா மற்றும் விஷ்ணு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

Advertisment
publive-image

ஆரம்ப கட்டம் முதல் அதிக பார்வையாளர்களை ஈர்த்து வரும் சத்யா சீரியல் தற்போது திடீரென்று நிறுத்தப்பட உள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது. இதை உறுதிப்படுத்தும் விதமாக ஜீ தமிழ் தொலைக்காட்சியின் இன்ஸ்ஸ்டாகிராம் பக்கத்தில், "அன்பான நேயர்களுக்கு வணக்கம். உங்கள் தொடர் ஆதரவுக்கு நன்றி. எதிர்பார்த்த காரணங்களால் சத்யா மற்றும் ஒரு ஊர்ல ராஜகுமாரி சீரியல் முடிவடைகிறது. இந்த சீரியலின் கடைசி அத்தியாயங்கள் அக்டோபர் 24ஆம் தேதி ஞாயிறு அன்று ஒளிபரப்பப்படும்" என பதிவிடப்பட்டு இருந்தது.

இந்த திடீர் அறிவிப்பால் அதிர்ந்து போன ரசிகர்கள் சமூக வலைதளங்களில் புலம்பி வருகின்றனர். அதோடு, ஜீ தமிழின் பதிவிற்கு கமெண்ட் செய்துள்ள ரசிகர்கள் 'சத்யா சீரியலை நிறுத்துவதற்கு பதில் செம்பருத்தி சீரியலை நிறுத்துங்கள்' என்று தெரிவித்துள்ளனர். மற்றும் சில ரசிகர்கள் 'ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் வேறு எதாவது சீரியலை நிறுத்தங்கள், தயவு சத்யாவை நிறுத்தாதீர்கள்' என்று பதிவிட்டுள்ளனர். இன்னும் சிலர் '100வது எபிசோடு வரை சத்யா சீரியலை கொண்டு போங்கள்' என்றுள்ளனர்.

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zee Tamil Zee Tamil Sathya Serial Zeetamil Serial Tamil Serial News Tamil Serial Update Serial Tv Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: