Advertisment

அப்பாவை பார்த்து கலங்கும் ஆவி: மருமகனை விரட்டியடித்த மாமனார்; ஜீ தமிழ் சீரியல் அப்டேட்!

ஜீ தமிழின் நினைத்தேன் வந்தாய், நெஞ்சத்தை கிள்ளாதே மற்றும் சந்தியா ராகம் சீரியல் குறித்து பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
NV Nk SR

அவுட்டிங் சென்ற கௌதம், மதுமிதா, மாயா ஜீவாவால் உருவான ஃபீலிங் - நெஞ்சத்தை கிள்ளாதே இன்றைய எபிசோட் அப்டேட்

Advertisment

நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலில் நேற்றைய எபிசோடில் கௌதம் கல்யாணம் சிம்பிளாக நடக்கும் என்று சொன்னதை நினைத்து சகுந்தலா மதுமிதா குடும்பத்தின் மீது கோபமடைந்த நிலையில் இன்று, கௌதம் வீட்டில் இருக்கும்போது ஜீவா மாயாவுக்கு போன் செய்து வெளியே போகலாம் என்று கூப்பிட மாயா ஜீவாவுடன் சண்டை போட இதை சகுந்தலா பார்த்து விடுகிறாள். என்ன இவங்க எப்ப பாத்தாலும் சண்டை போட்டுக்கிட்டே இருக்காங்க என்று யோசிக்கிறாள்.

பிறகு சகுந்தலாவின் அண்ணன் மகன் இவங்க சண்டை போடாம இருக்கணும்னா இவங்க கூட கௌதமும் போகணும் என்று சொல்ல சகுந்தலா மாயாவும் ஜீவாவும் வெளியே போறாங்க நீங்களும் அவங்களோடு போயிட்டு வாங்க அப்பதான் உங்களுக்கும் ஒருவரை ஒருவர் புரிஞ்சுகிட்ட மாதிரி இருக்கும் என்று சொல்கிறாள். ஆனால் கௌதம் முடியாது என்று மறுக்க சகுந்தலா அவனை வற்புறுத்தி அனுப்பி வைக்கிறாள்.

அடுத்ததாக எல்லோரும் டின்னருக்காக ரெஸ்டாரன்ட் வருகின்றனர். மாயா மற்றும் ஜீவா தனியாக உட்கார வேண்டும் என்று தனியாக சென்று கைகோர்த்தபடி உட்கார்ந்திருக்கின்றனர். இதைப் பார்த்து கௌதம் மதுமிதா என இருவரும் ஃபீல் பண்ணுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சீனுவை வெளியே துரத்திய  ரகுராம்.. வார்த்தையை விட்ட சிவராமன், அடுத்து என்ன? சந்தியா ராகம் இன்றைய எபிசோட் அப்டேட்  

சந்தியா ராகம் சீரியலில் நேற்றைய எபிசோடில் சாட்டையை எடுத்த ரகுராம் சீனுவை அடித்த நிலையில் இன்று, ரகுராம் சீனுவை சாட்டையால் வெளுத்து எடுக்க மாயா குறுக்கே வந்து தடுக்க ரகுராம் நீ செய்த தப்பை சரி செய்ய பார்த்து இருக்க ஆனா அவன் மேலும் மேலும் தப்பு பண்ண தூண்டி இருக்கான். அவனை மன்னிக்க முடியாது என்று அதிர்ச்சி கொடுக்கிறார்.

மேலும் சீனுவை பிடித்து வெளியே தள்ளி இனிமே இந்த வீட்டில் உனக்கு இடம் இல்லை என துரத்துகிறார். இதனால் எல்லோரும் சோகம் அடைகின்றனர். மாயா கண்கலங்கியபடி மொட்டை மாடிக்கு செல்ல சீனு வெளியில் கதவை பிடித்தபடி நிற்க மாயா மனதுக்குள் என்னை மன்னிச்சுடு சீனு பெரியப்பா உன்னை வீட்ட விட்டு வெளியே அனுப்புவார்னு யோசிக்கல என்று வருத்தப்படுகிறாள்.

அதேபோல் சீனு மாயாவை பார்த்து நான் தான் எல்லாத்துக்கும் காரணம் என்னை மன்னிச்சிடு என மனதுக்குள் வருந்துகிறான். சீனு விடியும் வரைக்கும் வாசலிலேயே காத்திருக்க மறுநாள் காலையில் மணி வெளியே எழுந்து வந்து சீனுவை பார்த்து மன்னிப்பு கேட்டு வீட்டுக்குள் கூப்பிட மாமா மன்னிக்கிற வரைக்கும் நான் வீட்டுக்குள்ள வரமாட்டேன் என்று சொல்கிறான். இந்த இடத்தை விட்டு நகரவும் மாட்டேன் என சொல்கிறான்.

அதன் பிறகு ஜானகி ரகுராமிடம் மன்னிப்பு கேட்க அவர் நீயும் இந்த குடும்பத்தோட கௌரவத்தை காப்பாத்த தனியாளா போராடி இருக்க நான் அத புரிஞ்சுக்காம விட்டுட்டேன் என்று வருத்தப்படுகிறார். மறுபக்கம் பத்மா ரமணியிடம் எல்லா தப்பும் பண்ண மாயா இந்த வீட்டுக்குள்ள இருக்கா என் பையன் வெளியே இருக்கான் என்று சொல்ல ரமணி சீனு இப்படி பண்ணலாமா என்று கோபப்பட பத்மா எல்லாம் தெரிஞ்ச ஜானகி அண்ணி முன்னாடியே இந்த விஷயத்தை சொல்லி இருந்தா இவ்வளவு பிரச்சனை வந்திருக்காதுல என்று பழியை தூக்கி போட ரமணி ஜானகி மீது எறிந்து விழுகிறாள்.

சீனு இந்த வீட்டுக்குள்ள வரணும் அதுக்கு நீ தான் ஏதாவது பண்ணனும் என்று கண்டிஷன் போட ரகுராம் சீனுவை மன்னிக்கவே முடியாது என்று சொல்லிவிட பத்மா கோபப்பட்டு பேச சிவராமன் நீ கல்யாணம் ஆகி போனதும் வீட்டை விட்டு இங்க வந்துட்ட உங்களையும் சேர்த்து அண்ணி தானே பாத்துக்கிறாங்க என்று வார்த்தையை விட பத்மா அப்போ என்னை ஓசி சோறு என்று சொல்றியா என்று கோபப்படுகிறாள்.இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அப்பாவை பார்த்ததும் இந்துவுக்குள் ஏற்பட்ட உணர்வு.. அவமானப்படும் சுடரின் தந்தை - நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட்

நினைத்தேன் வந்தாய் சீரியலின் நேற்றைய எபிசோடில் சுடரின் அப்பாவை மனோகரி வீட்டிற்குள் கூட்டி வந்து அவரை வைத்து சுடரை வெளியே துரத்த பிளான் போட்ட நிலையில் இன்று, சுடரின் அப்பா குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுத்து அவர்களுடன் விளையாடிக் கொண்டிருக்க சுடர் நான் போய் வேலையை பார்க்க வேண்டும் என்று கிளம்பி வருகிறாள்.

அடுத்ததாக தாலி செய்ய வந்த ஆச்சாரி தங்கம் கொடுங்க என்று கேட்க கனகவல்லி தங்க காயினை கொண்டு வந்து கொடுக்க உங்க மூத்த மருமகளோட தாலியை கொடுங்க என்று கேட்கிறார். மூத்த மருமகளோட தாலி தொலைந்து விட்டதாக சொல்ல ஆச்சாரி காயினை வைத்து தாலியை செய்ய தொடங்குகிறார். அப்போது சுடர் அங்கு வர அவளது கழுத்தில் இருந்து தாலி தொங்க ஆச்சாரி அதை பார்த்து விடுவாரா என்ற பில்டப் எகிற பார்க்க முடியாமல் போகிறது.  

அடுத்து அஞ்சலி சுடர் வைத்துக் கொண்டிருக்கும் குங்கும டப்பாயை திறக்க அந்த குங்குமம் அவள் மீது பட்டு விட குங்குமத்தை துடைக்கும் போது தாலி தொங்குவதை பார்த்த சுடர் அதை எடுத்து மறைத்துக் கொள்கிறாள். அடுத்ததாக சுடரின் அப்பா குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கும்போது அங்கு வந்த இந்து இதுவரை பார்த்ததும் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே என்று யோசிக்கிறாள். சுடரின் அப்பாவுக்கும் யாரோ ஒரு நபர் இருப்பதைப் போல உணர்கிறார். திடீரென அஞ்சலி என்ன தாத்தா கையை நீட்டிக்கிட்டு யோசிச்சிட்டு இருக்கீங்க என்று கேட்க என் பொண்ணோட ஞாபகம் வந்துடுச்சு என்று இந்துவை பற்றி சொல்கிறார்.

பிறகு குழந்தைகள் வாங்க தாத்தா சாப்பிடலாம் என்று அவரை கூட்டி வர அங்கு ஏற்கனவே சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் இது விஐபிகள் உட்கார்ந்து சாப்பிடும் இடம் என சத்தம் போடுகின்றனர்.மனோகரியின் அப்பா சுடரின் அப்பாவை அவமானப்படுத்தி வெளியே துரத்துகிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment