டிக்டாக் பிரபலம்… குறும்பட நடிகை… இளம் வயதில் சாதித்த சீரியல் நடிகை பிரனிகா

Tamil Serial Update : இவர் நடித்த ஒரு சில குறுமபடங்களை பார்த்த விஜய் டிவிய சீரியல் இயக்குநர் ஒருவர் நடிகைகள் தேர்வுக்கு அழைத்துள்ளார்.

Tamil Serial Actress Pranika Life : சின்னத்திரையில் சீரியல் தொடங்கிய புதிதில் வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைக்காத நடிகைகள் பலரும் சின்னத்திரையில் தங்களை பிரபலப்படுத்திக்கொண்டனர். இதே நிலை காலங்காலமாக தொடர்ந்து வந்துகொண்டிருந்த நிலையில், தற்போது சமூக வலைதள பிரபலங்களே சீரியலை ஆக்கிரமித்துள்ளார்கள் என்று சொல்லாம். டிக்டாக் போன்ற சமூக வலைதளங்களில் தங்களை பிரபலப்படுத்திக்கொண்ட பலரும் தற்போது சின்னத்திரையில் தனக்கென தனி இடைத்தை பெற்று பிரபலமாகியுள்ளனர்.

அந்த வகையில் டிக்டாக் வீடியோ மூலம் புகழ் பெற்று சீரியலில் தனக்கென ரசிகர்கள் கூட்டத்தை பெற்றவர் நடிகை பிரனிகா தக்‌ஷன்யா. பெற்றோரின் ஆசைக்காக மருத்தவம் படிக்க நீட் தேர்வு கோச்சிங் சென்ற அவர், தீராத சினமா மோகத்தால், தமிழகத்தில் மத்திய பிரதேசமான திருச்சியில் இருந்து சென்னை வந்துள்ளார். டிக்டாக் ஆப் பிரபலமாக இருந்த அந்த காலகட்டத்தில் பல வீடியோக்களை பதிவிட்ட இவருக்கு ரசிகர்கள் கூட்டம் சேர தொடங்கியுள்ளது.

அதன்பிறகு பல குறும்படங்களில் நடித்த அவர், யூடியூப் தளத்திலும் வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளார். இதன் மூலம் பிரபலான இவருக்கு சீரியல் வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர் நடித்த ஒரு சில குறுமபடங்களை பார்த்த விஜய் டிவிய சீரியல் இயக்குநர் ஒருவர் நடிகைகள் தேர்வுக்கு அழைத்துள்ளார். அதில் இவர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதை தொடர்ந்து பாவம் கணேசன் சீரியலில் துணை காதாப்பாத்திரத்தில் (நாயகியின் தங்கை) நடிக்க ஒப்பந்தமானார்.

அதன்பிறகு விஜய்டிவியின் ரியாலிட்டி ஷோவான ‘காமெடி ராஜா கலக்கல் ராணி’ ஷோவில் கலந்துகொண்டு புகழ்பெற்ற இவர், தனது திறமையின் அடிப்படையிலே தற்போது இந்த நிலையை அடைந்துள்ளார். சி்ன்னத்திரையில் தனக்கென ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ள அவர் தற்போது எங்கள் பாட்டன் சொத்து படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகிறார்.

இளம் வயதிலே பிசியான சின்னத்திரை நடிகையாக வலம் வரும் பிரனிகாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஃபாலோவர்ஸ் 8 லட்சங்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சின்னத்திரையில் பிஸியாக வந்தாலும், தனது படிப்பை தொடர அவர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial paavam ganesan actress pranika life story in tamil update

Next Story
பாகுபலி-2-வின் அடுத்த சாதனை… உலகளவில் 9,000 திரையரங்குகளில் ரிலீஸ்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com