Advertisment

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2... முக்கிய கேரக்டரில் முதல் சீசன் மருமகள் : காரணம் இதுதானா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியல் இன்று முதல் ஒளிபரப்பாக உள்ள நிலையில், முதல் சீசனில் நடித்த முக்கிய நடிகை ஒருவர் 2-ம் பாகத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
Pandian Stores 2

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நேற்று முன்தினம் முடிவுக்கு வந்த நிலையில், இன்று முதல் தொடங்க உள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் 2-ம் பாகத்தில் முதல் பாகத்தில் நடித்த முக்கிய நடிகை ஒருவர் களமிறங்கியுள்ளார்.

Advertisment

தமிழ் சின்னத்திரையின் முக்கிய சீரியலிகளில் ஒன்றாக இருந்தது பாண்டியன் ஸ்டோர்ஸ். கடந்த 5 வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த இந்த தொடரில் ஸ்டாலின் முத்து, சுஜிதா தனுஷ், ஹேமா, வெங்கட், குமரன், சரவண விக்ரம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சகோதர பாசம், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, கூட்டுக்குடும்பம் உள்ளிட்ட பல தேவைகயை வலிறுத்தும் விதமாக இந்த சீரியலின் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கடந்த அக்டோபர் 28-ந் தேதியுடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து இன்று முதல் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் 2-ம் பாகம் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீரியல் தொடர்பான ப்ரமோ கடந்த சில வாரங்களாக இணையத்தில் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், முதல் சீசனில் மூர்த்தி கேரக்டரில் நடித்த ஸ்டாலின் முத்து இந்த தொடரில் பாண்டியன் என்ற கேரக்டரில் நடிக்கிறார்.

பாண்டியன் கேரக்டருக்கு ஜோடியாக நடிகை நிரோஷா நடித்துள்ள நிலையில், ஸ்டாலின் முத்து 4 பிள்ளைகளுக்கு தந்தையாக நடிக்கிறார். சகோதரர்களின் பாசத்தை அடிப்படையாக கொண்ட முதல் சீசன் ஒளிபரப்பானது. தற்போது 2-வது சீசன் அப்பா – மகன்கள் இடையிலான பாசத்தை அடிப்படையாக கொண்டது என்பது சீரியலின் ப்ரமோ மூலம் தெரியவந்துள்ளது. மேலும் முதல் சீசனில் நடித்த ஸ்டாலின் முத்து தவிர மற்ற எந்த நடிகரும் 2-ம் பாகத்தில் இல்லை என்று கூறப்பட்டது.

Meena Pandian stores

ஆனாலும் முதல் சீசனில் மீனா கேரக்டரில் நடித்து வந்த நடிகை ஹேமா 2-ம் பாகத்தில் இருக்கிறார் என்று தகவல் வெளியாகி வந்தாலும், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. ஹேமாவும் இது தொடர்பான ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளிக்காமல் இருந்து வந்த நிலையில், தற்போது தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க உள்ளதாக ஹேமா ராஜ்குமார் கூறியுள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரின் கேரக்டர் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

முதல் சீசனில் ஜீவாவின் மனைவியாக எதார்த்த நடிப்பை கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஹேமா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் டிஆர்பி முன்னேற்றத்திற்கான முக்கிய காரணங்களில் ஒருவராக இருந்தார். ஆனால் முதல் சீசனில் நடித்தவர்கள் 2-வது சீசனில் இல்லை என்பதால், ரசிகர்கள் கவனத்தை ஈர்க்க ஹேமா உள்ளே வந்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Pandian Stores Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment