விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சமீபத்தில் முடிவுக்கு வந்த நிலையில், சீரியலின் 2-ம் பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியின் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் 1-ந் தேதி தொடங்கிய சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இது ஒரு சகோதரர்களின் கதை என்ற டேக் லைனுடன் ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியலில் ஸ்டாலின் முத்து, சுஜிதா தனுஷ், குமரன், வெங்கட், ஹேமா ராஜ்குமார், சரவண விக்ரம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
/indian-express-tamil/media/media_files/BPnsmVgUWb1m0zBvqml8.jpg)
கடந்த 5 வருடங்களா ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கடந்த அக்டோபர் 28-ந் தேதி முடிவுக்கு வந்தது. ஆனால் அதற்கு சில வாரத்திற்கு முன்பே பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் 2-ம் பாகத்திற்கான ப்ரமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. முதல் சீசனில் மூர்த்தி கேரக்டரில் நடித்த நடிகர் ஸ்டாலின் முத்து தவிர மற்ற யாருமே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2-ல் இல்லை.
அதே சமயம் முதல் சீசன் சகோதரர்களின் கதை என்று ஒளிபரப்பான நிலையில், 2-வது சீசன் தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்ற டேக் லைனுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இதன் மூலம் முதல் சீசன் சகோதரர்களின் பாசமாக இருந்தது. தற்போது 2-வது சீசன் அப்பா மகன் இடையேயான பாசபினைப்பை சொல்லும் கதையாக இருக்கும் என்று தெரியவருகிறது. அதேபோல் முதல் சீசனில் மூர்த்தியாக நடித்த ஸ்டாலின் முத்து 2-வது சீசனில் பாண்டியன் என்ற கேரக்டரில் நடிக்கிறார்.
அதேபோல் முதல் சீசனில் தனம் கேரக்டரில் சுஜிதா தனுஷ் நடித்து வந்த நிலையில், தற்போது அதே தனம் கேரக்டரில் நடிகை நிரோஷா நடித்து வருகிறார். முதல் சீசனில் மூர்த்திக்கு 3 தம்பிகள் இருந்தனர். தற்போது 2-வது சீசனில் பாண்டியன் கேரக்டருக்கு 3 மகன்கள் உள்ளனர். இந்த கேரக்டரில் வி.ஜே.தங்கவேல் கந்தசாமி, வசந்த் வாசி, ஆகாஷ் பிரேம்குமார் ஆகிய மூவரும் மகன்களாக நடித்து வருகின்றனர்.
/indian-express-tamil/media/media_files/Pp4UNSgdMHCslVzx1fTu.jpg)
அதேபோல் இசையமைப்பாளர் இளையராஜாவின் மருமகள் விலாசினி, ஷாலினி, ரிஹானா ஆகியோர் முக்கிய பெண் கேரக்டரில் நடித்து வருகின்றனர். மேலும் பிரபல வில்லன் நடிகர் அஜய் ரத்னம், மற்றும் காயத்ரி பிரியா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர். இதில் காயத்ரி பிரியா வடிவு என்ற கேரக்டரில் நடிப்பதாக அவரே தனது இன்ஸ்டா வீடியோவில் தெரிவித்துள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் சீசனுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், 2-வது சீசனுக்கும் அதே வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 28-ந் தேதி பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் சீசன் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து நேற்று முதல் (அக் 30) பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியல் தனது ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“