சன்டிவியின் முக்கிய சீரியலான எதிர்நீச்சல் சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்த நடிகர் மாரிமுத்து தற்போது மறைந்துவிட்டாலும் அவரது கேரக்டரை இமிடேட் செய்யும் வகையில் விஜய் டிவி சீரியல் ஒன்று தொடங்கியுள்ளது.
விஜய் டிவியின் ப்ரைம் டைம் சீரியலிகளில் முக்கிய இடம் பெற்றது பாண்டியன் ஸ்டோர்ஸ். சகோதர பாசத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த சீரியல் கடந்த 5 வருடங்களா ஒளிபரப்பாகி வந்த நிலையில், கடந்த வாரம் நிறைவு பெற்றது. ஆனாலும் அடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 என்ற பெயரில் தந்தை மகன் பாசத்தை அடிப்படையாக வைத்து புதிய சீரியல் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
முதல் சீசனில் நடித்த ஸ்டாலின் முத்து மற்றும் ஹேமா ராஜ்குமார் தவிர மற்ற அனைவரும் புதுமுகங்களாக நடித்து வரும் இந்த சீரியலில், பிரபல வில்லன் நடிகர் அஜய் ரத்னம் சில ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் சின்னத்திரையில் ரீ-என்டரி கொடுத்துள்ளார். இந்த சீரியலில் பாண்டியன் (ஸ்டாலின் முத்து) மனைவி தனம் (நிரோஷா) கேரக்டரின் அண்ணனாக அஜய் ரத்னம் நடிக்கிறார். இந்த சீரியல் மூலம் சின்னத்திரையில் ரீ-என்டரி ஆகியுள்ள அவர் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அஜய் ரத்னம் சிறப்பாக நடித்து வந்தாலும், அவரது கேரக்டரின் தோற்றம், எதிர்நீச்சல் குணசேகரனை நினைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது. அதே வெள்ளை வேட்டி சட்டை, நெற்றியில் மஞ்சள், திருநீர், பூசிக்கொண்டு வருகிறார். இதில் ஒரு வித்தியாசம் என்னவென்றால், எதிர்நீச்சல் குணசேகரன், மஞ்சளும் கும்குமம் வைத்திருப்பார். ஆனால் இவர் மஞ்சள் திருநீர் வைத்திருக்கிறார்.
இந்த சீரியலை பார்க்கும் ரசிகர்கள் அஜய் ரத்னம் என்ன எதிர்நீச்சல் குணசேரனனுக்கு போட்டியா என்று கேட்டு வருகின்றனர். இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சற்று விமர்சனங்களை சந்தித்தாலும் முதல் பாகத்தை போலவே வரவேற்பையும் பெற்று வருகிறது. தமிழ் சின்னத்திரையில் இதுவரை அதிக டிஆர்பி புள்ளிகள் பெற்ற சீரியல் என்ற பெருமை பெற்றுள்ள எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தவர் நடிகர் மாரிமுத்து.
சமீபத்தில் மாரிமுத்து மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்துவிட்ட நிலையில், அவருக்கு பதிலாக தற்போது நடிகரும் எழுத்தளருமான வேல ராமமூர்த்தி ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் சீசன் ஆனந்தம் படத்தின் காப்பி என்று விமர்சனம் எழுந்த நிலையில், தற்போது தனது மகன்களை துன்புறுத்துவதால் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரத் - நாசர் நடிப்பில் வெளியான எம்.மகன் படத்தின் காப்பி என்று விமர்சித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“