Pandian Stores Actor Update : விஜய் டிவியின் ஹிட் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். சகோதர பாசம், கூட்டு குடும்பத்தின் ஒற்றுமை விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை உள்ளிட்ட இன்றைய வாழ்கைக்கு தேவையான அனைத்து அமைச்சங்களும் உள்ளடக்கிய இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலுக்கு தமிழில் கிடைக்கும் வரவேற்பை தொடர்ந்து மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீரியலில் இடம்பெறும் மூர்த்தி, தனம், ஜீவா, கதிர் முல்லை மீனா கண்ணன் ஆகிய முதன்மை கதாப்பாத்திரங்கள் மக்கள் மத்தியில் பெரும் பிரபலம். இதில் மூர்த்தி ஜீவா கதிர் மூவருக்கும் திருமணம் ஆகிவிட்ட நிலையில், கடைக்குட்டி கண்ணன் தற்போது வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்துகொணடுள்ளார். இதனால் பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தில் பெரும் பிரச்சனை வெடித்துள்ள நிலையில், கண்ணனை வீட்டை விட்டு வெளியில் அனுப்பிவிட்டனர்.
இதனால் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த கதையில் கண்ணன் கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் சரவண விக்ரம் விபத்தில் சிக்கியதாகவும், காயத்தை பொருட்படுத்தாமல் படப்பிடிப்பில் பங்கேற்றதாகவும், அவரது தங்கை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது பதிவில்,
“பாண்டியன் ஸ்டோர்ஸில் திருமண காட்சியின் படப்பிடிப்பின் போது, என் சகோதரர் ஒரு சிறிய விபத்தில் சிக்கி (வாகனம் ஓட்டும்போது) காயமடைந்தார். ஆனாலும் காயத்தை பொருட்படுத்தாத அவர், வலியுடன் அடுத்த 4 மணி நேரத்திற்குள் மீண்டும் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு சென்றார். அங்கு யாரிடமும் விபத்து குறித்து சொல்லாமல் படப்பிடிப்பை முடித்து கொடுத்துள்ளார். அந்த விபத்திற்கு பிறகு சில நாட்கள் அவரால் சரியாக நடக்க முடியவில்லை ...
ஆனால் விபத்து நடந்தாலும் அவரது நடிப்பு அப்படியே இருந்தது . அவரது மன உறுதியை பார்த்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். என்னை ஊக்கப்படுத்துவது நீங்கள் தான் அண்ணா உங்கள் எல்லையற்ற அன்பிற்கும் ஆதரவிற்கும் அவரது ரசிகர் குடும்பத்தினர் அனைவருக்கும் சிறப்பு நன்றி என பதிவிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு வைரலாகி வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil