Pandian Stores: சீரியல் அம்மா மரணம்; மொட்டை அடித்த கண்ணன்: நிஜ அம்மாவுடன் க்யூட் போட்டோ!

Tamil Serial Update : விஜய் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னணியில் இருந்து வருகிறது

Pandian Stores Actor Saravana Vikram With His Mother : சின்னத்திரை ரசிகர்களை நாள்தோறும் ஒருவித எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி வரும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர். விஜய் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னணியில் இருந்து வருகிறது. சகோதர பாசம், கூட்டுக்குடும்பம், மற்றும் வியாபார யுக்தி போன்ற பல முக்கியத்துவங்கள் நிறைந்த இந்த சீரியல் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.

குடும்ப பெண்களையும் இல்லத்தரசிகளையும் கவர்ந்த இந்த சீரியல் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்புவைர கலகலப்பு மற்றும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் தூண் என்று அழைக்கப்படும் லக்ஷ்மி அம்மா கடந்த வாரம் இறப்பது போல காட்சிகள் ஒளிபரப்பாகியது. இந்த காட்சிகள் ரசிகர்களை சோக்க்கடலில் ஆழ்த்தியுள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக லக்ஷ்மி அம்மாலின் இறப்பு தொடர்பாகவே திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது.

அதிலும் குறிப்பாக கிராமத்தில் ஒருவர் இறந்துவிட்டால் என்னென்ன சடங்குகள் செய்வார்களே அந்த அளவிற்கு அனைத்து சடங்குகளும் கண்முன் காட்டப்பட்டது. ஆனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைசி மகனான கண்ணன் கடைசியாக அம்மா முகத்தை கூட பார்க்க முடியவில்லை. ஆனாலும் கடைசி நேரத்தில் அவன் வருவதற்குள் மூர்த்தி இறுதிச்சடங்கை முடித்துவிடுகிறார். இதனால் கதறி அழும் கண்ணன் அம்மாவுக்காக மொட்டை அடித்துக்கொள்கிறான். அதன்பிறகு இறுதி சடங்கு செய்ய அண்ணன்கள் அழைப்பார்கள் என்று எதிர்பார்த்த கண்ணனுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

ஆனாலும் சீரியல் அம்மா இறந்ததற்காக நிஜமாக மொட்டை அடித்த கண்ணனுக்கு ரசிகர்கள் பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். இதனால் கண்ணனாக நடித்து வரும் சரவண விக்ரம் கடந்த ஒரு வாரமாக இணையதளத்தில் ட்ரெட்டிங் ஆகி வருகிறார். மேலும் சமூக வலைதளங்களில் அவருக்கான ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சரவண விக்ரம் தற்போது தனது அம்மாவுடன் எடுத்துகொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial pandian stores actor saravana vikram with his mother

Next Story
Tamil Serial Rating : இந்த ஜென்மத்தில் முடியுமானு தெரியல… ஆனாலும் சந்தோஷம் தான்… குட் ரோஜா
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com