Pandian Stores Actress Hema Rajkumar New Costume : சின்னத்திரையில் ரசிகர்கள் மனம் கவர்ந்த சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். விஜய் டிவியின் ப்ரைமை டைமில் ஒளிரப்பாகி வரும் இந்த சீரியல் இன்றைய காலகட்டத்திற்கு மிக முக்கிய தேவையாக குடும்ப ஒற்றுமையை மையமாக வைத்து திரைக்கதை அமைச்சப்பட்டுள்ளது. மேலும் இந்த சீரியில் கதை ரசிகர்களின் மத்தியில் பெரும வரவேற்பை பெற்று வரும் நிலையில், மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.
Advertisment
ஸ்டாலின், சுஜிதா, குமரன் தங்கராஜன், வெங்கட், காவியா அறிவுமணி, ஹேமா ராஜ்குமார், சரவண விக்ரம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகினறனர். இவர்கள் அனைவருமே இந்த சீரியல் நடிக்கிறார்கள் என்று சொல்வதை விட வாழ்ந்து வருகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும் அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் தங்களது பெரை நிலைநாட்டி வைத்துள்ளனர்.
இந்த சிரியலில் நடித்து வரும் நடிகர் நடிகைகள் அனைவரும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகின்றனர். இதில் அவ்வப்போது தங்கள் குறித்து புகைப்படம் மற்றும்வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த பதிவுகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை கிடைத்து வரும் நிலையில், சமூக வலைதளங்களில் இவர்களின் ரசிகர்கள் எண்ணிக்கையும் நாள்தோறும் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா கேரக்டரில் நடித்து வரும் ஹேமா ராஜ்குமார் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டீவாக இருந்து வருகிறார். இவர் வெளியிடும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், ஹேமா ராஜ்குமார் தற்போது புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் லெகின்ஸ் அணிந்துள்ள அவர், அதற்குமேல் புடவை கட்டி புது ஸ்டைலை அறிமுகப்படுத்தியுள்ளார்.
தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்திற்கு தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகினறனர். இதில் பல ரசிகர்கள் சூப்பர் வொண்டர்ஃஃபுல் என்று பதிவிட்டுள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil