Tamil Serial Actress Sujith Dhanush Viral Photo : தமிழகத்தில் இல்லத்தரசிகளிடம் மிகுந்த வரவேற்பை பெற்று வருவது சீரியல். அதிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. விஜய் டிவியின் சீரியல்களை இல்லத்தரசிகள் மட்டுமல்லாது இளைஞர்கள் பலரும் பார்த்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் சீரியல்களின் டைட்டில். தமிழில் வெளியான பல ஹிட் படங்களின் டைட்டிலை பயன்படுத்தி ஒளிபரப்பாகும் சீரியல்கள் மக்கள் மத்தியில் எளிதில் பிரபலமடைந்து வருகின்றன.
அதில் சில சீரியல்களுக்கு சினிமா டைட்டில் இல்லாமலும் மக்கள் ஆதரவு இருந்து வருகிறது. அந்த வகையில் சினிமா டைட்டில் இல்லாமல் புகழ்பெற்ற முக்கிய சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். விஜய் டிவியின் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் சகோதரத்துவம், கூட்டு குடும்பத்தின் நன்மைகள் உள்ளிட்ட வாழ்வின் பல முக்கிய தேவைகளை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சீரியல் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் வரவேற்பை பெற்று வருகிறது.
இதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் மூத்த மருமகள் தனம் கேரக்டரில் சுஜிதா தனுஷ் நடித்து வருகிறார். தனது சிறந்த நடிப்பால் அந்த கேரக்டருக்கு உயிர் கொடுத்து வரும் சுஜிதா தனுஷ்க்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். பாக்யராஜ் இயக்கத்தில் கடந்த 1983-ம் ஆண்டு வெளியான முந்தானை முடிச்சு என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், அதனைத் தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அதன்பிறகு தமிழில் வாலி உட்பட தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னம் என பல மொழிகளில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்.
ஆனால் எவ்வளவுதான் சினிமாவில் நடித்து வந்தாலும், அவரை ரசிகர்கள் மத்தியில் அடையாளம் காட்டிய பெருமை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலையே சாறும். தற்போது பிரபலமான சீரியல் நடிகையாக வலம் வரும் இவர் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வருகிறார். இதில் அவ்வப்போது வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வரும் சுஜிதா சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. வெள்ளை நிற மாடர்ன் உடையில் போட்டோஷூட் செய்துள்ள சுஜதா அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் வெள்ளித்திரை நாயகிகளுக்கே சவால் விடுவார் தனம் என்று கூறி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வயனதாக பாட்டி வேடம் போட்ட சுஜிதாவின் புகைப்படம் வைராகி வந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil