உன்னழகை கண்டதுமே மின்னொளி பெறுதே...! பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதாவின் பக்கா ரீல்

Tamil Serial Update : தமிழ் மலையாளம், தெலுங்கு கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்துள்ள சுஜிதாவை ரசிகர்களிடம் கொண்டு சென்றது பாண்டியன் ஸ்டோர்தான்.

Tamil Serial Update : தமிழ் மலையாளம், தெலுங்கு கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்துள்ள சுஜிதாவை ரசிகர்களிடம் கொண்டு சென்றது பாண்டியன் ஸ்டோர்தான்.

author-image
WebDesk
New Update
உன்னழகை கண்டதுமே மின்னொளி பெறுதே...! பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதாவின் பக்கா ரீல்

Tamil Serial Actress Sujitha Dhanush Viral Reels : சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் நடிகை சுஜிதா தனுஷ் அவ்வப்போது வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியலுக்கு இல்லத்தரசிகளில் வேரரெட் சீரியலாக உள்ளது. சகோதர பாசம், கூட்டு குடும்பத்தின் முக்கியத்துவம், என இன்றைய உலகிற்கு தேவையான அவசியத்தை எடுத்து கூறும் வகயைில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது

கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியல் விஜய் டிவியின் முக்கிய அடையாளமாக உள்ளது.  இதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் மூத்த மருமகள் தனம் கேரக்டரில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருபவர் சுஜிதா தனுஷ். பிறந்த சில மாதங்களிலேயே திரைத்துறையில் அறிமுகமான இவர், குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார். மேலும் அஜித்தின் வாலி உள்ளிட்ட சில படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

மேலும் தமிழ் மலையாளம், தெலுங்கு கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்துள்ள சுஜிதாவை ரசிகர்களிடம் கொண்டு சென்றது பாண்டியன் ஸ்டோர்தான். சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் சுஜிதா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவரின் பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருவது வழக்கமான ஒன்று. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவர் விளம்பரம் இயக்கிய வீடியோ பதிவை வெளியிட்டிருந்தார்.

Advertisment
Advertisements

அந்த வகையில் தற்போது சுஜிதா தற்போது தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் ரீல் ஒன்றை வெளியிட்டுள்ளார். உன்னழகை கண்டதுமே மின்னொளி பெறுதே என்ற தொடங்கும் அந்த பாடல் ஒலிக்க சுஜிதா மாடர்ன் உடையில் நடந்து வருகிறார். உலக அழகி போட்டி போன்ற உணர்வை தரும் இந்த ரீல் பதிவு தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. தற்போது வரை இந்த பதிவுக்கு 25 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் லைக் செய்துள்னர்.

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Actress Sujitha Pandian Stores Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: