Pandian Stores Baakiyalakshmi Magasangamam : தனம் சொன்னதை கேட்டு நிச்சயத்திற்கான வேலைகளை கவனிக்கிறான் கண்ணன். அப்போது அவனை பார்க்கும் ஐஸ்வர்யா, கண்ணனுக்கு தன்னை பிடிக்கவில்லை என்று தவறாக நினைக்கிறான். இதை பார்த்த கஸ்தூரி, ஐஸ்வர்யாவை வலுக்கட்டாயமாக உள்ளே இழுத்து செல்கிறாள். இதன்பிறகு தனத்திடம் வரும் கண்ணன்,நம்ம ஊருக்கு கிளம்பலாம். என சொல்லஅதற்கு அவள் இன்னும் ஒருநாள் தான இருக்கு. நிச்சயம் முடிச்சுட்டு போகலாம் என்கிறாள்.
ஆனால் அவன் எனக்கு இங்க இருக்கவே பிடிக்கலை. எனக்கு பஸ்க்கு காசு கொடுங்க. நான் மட்டும் கிளம்புறேன் எனசொல்கிறான. அப்போது அங்கு வரும் எழில், தனத்தை சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டு, கண்ணனிடம், நீ குன்னக்குடிக்கு போனாலும் இது சரியாகாது. நீ இங்கயே இருந்து மனசை மாத்திட்டு போடா என கூறுகிறான். இதற்கிடையே பிரசாந்துடன் பேசிக்கொண்டிருக்கும் கோபி, அந்த வழியாக வரும் கண்ணனை அழைத்து கிண்டல் செய்கிறான். இதனால் கோபமடையும் கண்ணன், நீங்க பேசிட்டு இருங்க என சொல்லிவிட்டு செல்கிறான்.
அப்போது ஐஸ்வர்யா கண்ணனிடம் பேச வரும்போது அவளை பார்க்கும் கோபி, நாளைக்கு உனக்கு நிச்சயம் இருக்குல. சீக்கிரம் போய் தூங்கும்மா என அனுப்பி வைக்கிறான். அடுத்த நாள் நிச்சயத்திற்கு கிளம்பாமல் இருக்கும் ஐஸ்வர்யாவை கஸ்துரி திட்ட, அவள் எனக்கு இந்த கல்யாணம் பிடிக்கலை என சொல்கிறாள். இதை கேட்டு கோபப்படும் கஸ்தூரி அவளை அவ அடிக்கும்போது இனியா பார்த்துவிடுகிறார். இதை இனியா ஜெனியிடம் சொல்ல அவர்கள் இருவரும் அறைக்கு வெளிய வந்து பார்க்கும் பார்க்கின்றனர்.
அப்போது ஐஸ்வர்யா எனக்கு கண்ணன் மாமாவை தான் ரொம்ப பிடிச்சு இருக்கு உன்னால என்னை பார்த்துக்க முடியலன்னா சொல்லு, நான் வேலை பார்த்து ஹாஸ்டல்ல தங்கி, என்னை நான் பார்த்துக்கிறேன் என சொல்கிறாள். அதற்கு கஸ்தூரி, நான் உனக்கு அம்மா ஸ்தானத்துல இருந்து சொல்றேன். உன்னை பிரசாந்தும், மல்லியும் அப்படி பார்த்துப்பாங்க. நீ ஒழுங்கா இப்போ கிளம்பி வா என செல்கிறாள். இதை கேட்ட இனியா, நம்ம போய் அம்மாகிட்ட சொல்லாமா என ஜெனியிடம் கேட்கும் போது, வேணாம். இது அவுங்க குடும்ப விஷயம் என சொல்கிறாள் ஜெனி.
அதன்பின்னர் அனைவரும் நிச்சயத்திற்கு தயாராகி வரும்போது, ஐஸ்வர்யாவை அவளை மிரட்டி நகைகளை போட வைக்கிறாள் கஸ்தூரி. இதனையடுத்து கோபி தலைமையில் நிச்சயம் ஆரம்பம் ஆகிறது. பிரசாந்த் ஐஸ்வர்யாவிற்கு மாலை போடுகிறான். ஆனால் ஐஸ்வர்யா பிரஷாந்த்க்கு மாலை போடாமல் தயங்குகிறாள். இதனால் அனைவரும் அதிர்ச்சியில் பார்க்க, கஸ்தூரி எதையோ சொல்லி சமாளிக்கிறாள். அதனை தொடர்ந்து பிரசாந்திற்கு மோதிரம் மாற்றி விட சொல்லும் போதும், கஸ்தூரி சொல்லியும் ஐஸ்வர்யா மோதிரத்தை மாற்றி விடாமல் நிற்கிறாள். அனைவரும் அதிர்ச்சியாக அவளை பார்க்க இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil