பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முக்கிய மாற்றம்
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், அடிக்கடி நடிகர் நடிகைகள் மாற்றம் நடந்து வருகிறது. அந்த வகையில் முல்லை கேரக்டருக்கு 3 நடிகைகள் மாறிவிட்ட நிலையில், கண்ணன் மனைவி ஐஸ்வர்யா கேரக்டருக்கும் நடிகைகள மாறிக்கொண்டே வருகின்றனர். நெல்லை சிவா இறந்ததை தொடர்ந்து அவருக்கு பதிலாக வேறு ஒரு நடிகர் நடித்து வருகிறார். இதனிடையே தற்போது மீனாவின் தங்கை ஸ்வேதா கேரக்டருக்கான நடிகை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
பிக்பாஸ் இந்த வார எலிமினேஷன் யார்?
விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த வாரம் யார் எலிமினேட் ஆவார் என்பது குறித்து பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது 50 நாட்களை கடந்துள்ள இந்நிகழ்ச்சியில் அடுத்து வரும் எபிசோடுகள் போட்டியாளர்களின் குடும்பத்தினர் சந்திக்கும் படலம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாரம் எலிமினேட் செய்வது யார் என்பது தொடர்பான ப்ரமோவில் பலரும் ஆயிஷாவை கூறியுள்ளனர்.
புதிய பிஸினஸ் தொடங்கிய சீரியல் நடிகை
விஜய் டிவியின் முத்தழகு சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் வைஷாலி. கடந்த வரும் தனது நீண்டநாள் காதலரை திருமணம் செய்துகொண்ட இவர், தற்போது பிட்னஸ் ஸ்டூடியோ ஒன்றை திறந்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டுள்ள அவர் இதற்கு ஆதரவு தர வேண்டும் என்று கூறியுள்ளார். இவரது கணவர் சத்யா ஏற்கனவே திருமண மண்டபம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
தனுஷூடன் இணைந்த கன்னட சூப்பர் ஸ்டார்
திருச்சிற்றம்பலம் படத்தை தொடர்ந்து தற்போது வாத்தி படத்தில் நடித்துள்ள நடிகர் தனுஷ் அடுத்து கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து வருகிறார். சாணிகாகிதம் படத்தை இயக்கிய அருண் மாதேஷ்வரன் இயக்கி வரும் இந்த படத்தில் தனுஷின் அண்ணனாக பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிக்கிறார். தற்போது தனுஷ் சிவராஜ்குமார் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. சிவராஜ்குமார் ஏற்கனவே ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.
வாரிசு படத்தை பார்க்க போகிறேன் – துணிவு பட இயக்குனர்
விஜய் நடிப்பில் விறுவிறுப்பாக தயாராகி வரும் வாரிசு படம் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது. இதே தினத்தில் அஜித் நடிப்பில் துணிவு படம் வெளியாக உள்ளது. விஜய் அஜித் படங்கள் ஒரே நாளில் வெளியாக உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நான் வாரிசு படத்தை தான் பார்க்க போகிறேன் என துணிவு படத்தின் இயக்குனர் எச்.வினேத் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“