MGR-ன் ஃபேவரிட் நாயகியை களமிறக்கும் விஜய் டிவி: மாஸாக வரும் புதிய சீரியல்

Tamil Serial Update : காதல் செண்டிமண்ட், ரொமான்ஸ், ஆக்ஷன் என் அனைத்து துறைகளிலும் அசத்தி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை இயக்குநர் சிவசேகர் இயக்கி வருகிறார்.

Tamil Serial Update : காதல் செண்டிமண்ட், ரொமான்ஸ், ஆக்ஷன் என் அனைத்து துறைகளிலும் அசத்தி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை இயக்குநர் சிவசேகர் இயக்கி வருகிறார்.

author-image
WebDesk
New Update
MGR-ன் ஃபேவரிட் நாயகியை களமிறக்கும் விஜய் டிவி: மாஸாக வரும் புதிய சீரியல்

Vijay TV New Serial Update : இல்லரசிகள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வரும் சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ்க்கு முக்கிய இடம் உண்டு. பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னணியில் இருந்து வருகிறது. காதல் செண்டிமண்ட், ரொமான்ஸ், ஆக்ஷன் என் அனைத்து துறைகளிலும் அசத்தி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை இயக்குநர் சிவசேகர் இயக்கி வருகிறார்.

Advertisment

மேலும் இந்த சீரியல் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில், தற்போது இயக்குந சிவசேகர் மற்றொரு பிரம்மாண்ட சீரியலை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியின் அன்புடன் குஷி மற்றும், சின்னத்தம்பி ஆகிய சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகர் பிரஜின் பத்மநாபன் மற்றும் நெஞ்சம் மறப்பதில்லை ஆயுத எழுத்து ஆகிய சீரியல் மூலம் புகழ்பெற்ற நடிகை சரண்யா இருவரும் இந்த சீரியலில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.

publive-image

இதில் மற்றொரு திருப்பமாக தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிககையான லதா இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே விஜய் டிவியின் சிவா மனசுல சக்தி ‘சுந்தரி நீயும் சுந்தரி நானும்’ உள்ளிட்ட சீரியலில் நடித்து வெற்றி கண்ட நடிகை லதா தற்போது மீண்டும் விஜய் டிவி சீரியலில் என்ட்ரி கொடுக்க உள்ளார். பாண்டியன் ஸ்டோர்ஸ் என்னும் குடும்ப சீரியலை இயக்கி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த இயக்குனர், தற்போது புதிய சீரியலில் இயக்க இருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Advertisment
Advertisements

அதுமட்டுமல்லாமல், ரசிகர்களின் ரசனைக்கேற்ப சீரியல் வழங்குவதில் முன்னணியில் இருந்து வரும் விஜய் டிவி, வரும் நவம்பர் மாதம் முதல் ‘முத்தழகு’ என்னும் புதிய நெடுந்தொடரை ஒளிபரப்ப உள்ள நிலையில் இந்த புதிய சீரியலின் அறிவிப்பு ரசிகாகள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: