Tamil Serial Pandian Stores Update In Tamil : பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், புதிய நடிகை ஒருவர் அறிமுகமாகியுள்ளார். அவரது கெட்டப் குறித்து புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் முல்லை கேரக்டர் மாறப்போகிறதா என்று கேள்வி எழுப்பி வருகினறனர்.
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சகோதரத்துவம், கூட்டுக்குடும்பம் என வாழ்ககைக்கு தேவையான அனைத்து அம்சங்களும் நிறைந்துள்ள இந்த சீரியல் பரபரப்பும் விறுவிறுப்பும் நிறைந்த காட்சிகளுடன் ஒளிபரப்பாபி வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் என்ற முதன்மை கதாப்பாத்திரத்தில் சுஜிதா தனுஷ் நடித்து வருகிறார்.
மேலும் மூர்த்தி கேரக்டரில் ஸ்டான்லி, வெங்கட், குமரன், சரவண விக்ரம், ஹேமா ராஜ்குமார், காவியா அறிவுமணி உள்ளிட்ட பல முக்கிய கேர்க்டரில் நடித்து வருகினறனர். தமிழில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இந்த சீரியல் மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி கண்டு வருகிறது. இதி்ல் குமரன் நடித்து வரும் கதிர் கேரக்டர் மற்றும் காவியா நடித்து வரும் முல்லை கேரக்டருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
சீரியலின் தொடக்கத்தில் விஜே சித்ரா முல்லை கேரக்டரில் நடித்து வந்தார். இவருக்கெ தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்த போது இவர் திடீரெ மரணமடைந்தார். அதன்பிறகு இந்த கேரக்டரில் காவியா அறிவுமணி நடித்து வருகிறார். முதலில் இவரை முல்லையாக ஏற்றுக்கொள்ளாத ரசிகர் தற்போது மெல்ல மெல்ல ஏற்று்ககொண்டு வருகின்றனர். ஆனாலும் கடந்த சில எபிசோடுகளாக முல்லை கேரக்ரில் நடிகை மாற்றம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
அதற்கு ஏற்றார் போல் புதுமுக நடிகை ஒருவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இருப்பது போல புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அவரது பெயர் அபிநயா என்றும், மக்கள் தொலைக்காட்சியில் அவர் நியூஸ் ரீடராக உள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜய் டிவியின் பாகியலட்சுமி சீரியலில், பள்ளியில் பேட்டி எடுக்கும் செய்தியாளராக ஒரு சில காட்சிகளில் வந்திருந்தார். அப்போது அந்த சீரியலில் நடித்து வரும் கம்பம் மீனா உள்ளிட்ட சில நடிகைகளுடன் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
இதனைத்தொடர்ந்து தற்போது இவர் புல் மேக்கப்பபுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் இருப்பது போல புகைப்படங்கள் வெளியாகியுள்ளதால், இவர் முல்லை கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறபப்ட்டர். ஆனால் தற்போது விசாரித்ததில், இவர் முல்லையின் தோழியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முல்லையின் தோழியான நடிப்பதற்கு எதற்காக முல்லை போலவே மேக்கப் என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்ப வருகினறனர்.
மேலும் அபிநயாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் பலரும் நீங்கள் தான் பாண்டியன ஸ்டோர்ஸின் அடுத்த முல்லையா என்று கேட்ட கேள்விக்கு அபிநயா தனது சிரிப்பை மட்டுமே பதிலாளஅளித்துள்ளார். இதனால் ரசிகர்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்த்தில் முல்லையின் தோழிக்கு என்ன வேலை? அப்படியே இருந்தாலும் இவருக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என்று குழம்பி வருகினறனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil