Pandian Stores Serial Episode Update : விட்டில் கண்ணனைப்பற்றியே நினைத்துக்கொண்டிருக்கும் தனம், கண்ணன் ஏதோ பதற்றத்தில் யோசிக்காமல் இந்த மாதிரி செய்துவிட்டான் என்று சொல்கிறாள். அப்போது மூர்த்தி, வீட்ல எல்லாருக்கும் சொன்னதுதான் தனம் உனக்கும். அவனுக்காக தானடி நம்ம இத்தனை வருஷம் குழந்தை பெத்துக்காம இருந்தோம். இப்போ தான் நீ குழந்தை பெத்துக்க போற. அந்த சந்தோஷத்தையாது நம்மளை அனுபவிக்க விட்டானா? என கேட்கிறான்
மேலும் படிப்பை நிறுத்தட்டும். சாப்டட்டும். ஏதாவது பண்ணட்டும். கல்யாணம் பண்றதுக்கே தைரியம் இருக்குறவன். அவன் வாழ்க்கையே அவனே பார்த்துப்பான். இனிமே நீ அவனை பற்றி எதுவும் யோசிக்கவும் கூடாது. பேசவும் கூடாது என சொல்கிறான். இதற்கிடையில் சோகமாக இருக்கும் ஜீவாவிடம் பேசும், மீனா, அவன் பண்ணது தப்புதான். இப்போ அவன் எங்க போய்டா இருப்பான். வீட்லயே அவன் தனியா படுக்க மாட்டான்டா என சொல்கிறாள்.
ஆனால் கண்ணன் பண்ணது பெரிய தப்பு மீனா. அவன் இப்படி பண்ணா, நம்ம யாருமே தாங்கிக்க மாட்டோம்ன்னு அவனுக்கு தெரியும். தெரிஞ்சும் பண்ணிருக்க என சொல்கிறான். அதற்கு மீனா அவன் ஏதோ அவசரத்துல பண்ணிட்டான்டா, அந்த பிரசாந்த் பையன் ஐஸ்வர்யா அவசரமா கூட்டிட்டு போக முடிவு எடுத்ததால தான் இந்த மாதிரி பன்னிருப்பான் என சொல்கிறாள். ஆனால் இதை கண்டுகொள்ளாத ஜீவா ஏதோ புலம்பிக்கொண்டிருக்கிறான்.
இதற்கிடையே சோகமான பேசிக்கொண்டிருக்கும் கதிர் அவன் இப்படி பண்ணுவான்னு எதிர்பார்க்கவே இல்லை முல்லை. அன்னைக்கு குடோன்ல கூட என்கிட்ட வந்து பிரெண்ட் பிரச்சனைன்னு சொல்லி ஏதோ சொல்ல வந்தான். அவன்கிட்ட நான் மனசு விட்டு பேசி இருக்கணும். என சொல்கிறான் அதற்கு முல்லை என்ன இருந்தாலும் அவன் பண்ணது தப்புங்க என சொல்கிறாள். அதற்கு அவன், இப்போ கண்ணன் கல்யாணம் பண்ணிக்கிட்டது யாருக்குமே நல்லது இல்லை முல்லை என சொல்கிறான்.
மேலும் பிரசாந்த் கோயில்ல வைச்சு வேற அடிச்சான் அவன் வேற கண்ணனை எதுவும் பண்ணிருவானோன்னு பயமா இருக்கு. என சொல்கிறான். அப்போது முல்லை அப்படி எல்லாம் எதுவும் நடக்காது. மல்லி அக்கா அவனை மதுரைக்கு கூட்டிட்டு போயிருப்பாங்க என சொல்கிறாள். இதற்கிடையே கல்யாணம் நின்றது குறித்து கஸ்தூரியிடம் சத்தம் போடும் பிரசாந்த், இப்போ ஊருக்கு போய், கல்யாணம் ஏன் நின்னுச்சுன்னு கேட்டா என்னத்த சொல்ல என கூறி கஸ்தூரியிடம் சத்தம் போடுகிறான்.
அப்போது மல்லி என்கிட்ட முன்னாடியே இதைப்பற்றி நீங்க சொல்லிருக்கணும் அத்தாச்சி என கஸ்தூரியிடம் சொல்ல அத்துடன் முடிகிறது இன்றைய எபிசோடு
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil