Pandian Stores Serial Episode Update: அத்தை இறப்பதற்கு முன் குடும்பத்தை பார்த்துக்கொள்ளுமாறும், கண்ணனை கைவிட்டுவிட்டுவிட வேண்டாம் என்று சொல்லியதாக தனம் சொல்கிறாள். அப்போது மீனா கண்ணனை கைவிட வேண்டாம்னு அத்தை சொல்லியும் அப்புறம் ஏன் நீங்க அவனை போக விட்டீங்க என்று கேட்கிறாள். இதை கேட்டு கோப்படும் தனம் அம்மா இப்போ எதுக்கு நீ தனத்துகிட்ட கேபப்படுற என்று கேட்க, என் மனதில் தோணுச்சி அதான் கேட்டேன் என்று மீனா சொல்றாள். அதற்கு தனம் அவன் வந்து அப்படி கேள்வி கேட்டதாலதான் இப்படி ஆச்சு என்று சொல்கிறாள்.
இதனிடையே லக்ஷ்மியின் அஸ்தியை கறைக்க சென்ற மூர்த்தி ஜீவா கதிர் மூவரும் வீட்டிற்கு வந்து சாப்பிடுகின்றனர். அப்போது ஐஸ்வர்யாவுடன் கண்ணள் வெளியில் நிற்கிறான். அதை பார்க்கும் ஊர் தலைவர் எல்லாரும் சாப்டோம் அம்மாவுக்காக மொட்டை போட்ருக்க நீ பட்டினியா இருக்க கூடாதுபா வா சாப்பிடு என்று உள்ளே அழைத்து வருகிறான். உள்ளே வரும் கண்ணனுக்கு மூர்த்தியின் பக்கத்தில் உட்கார வைத்து சாப்பாடு போடுகின்றனர்.
அப்போது மூர்த்தி கண்ணனை பார்த்தவுடன் சாப்பிடாமல் எழுந்து நிற்கிறாள். இதை பார்த்து அதிர்ச்சியாகும் கண்ணன், நான் வெளியில போறேன் அண்ணே நீங்க சாப்பிடுங்க பட்னி இருக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு வெளியில் வருகிறாள். இதன்பிறகு சாப்பிட்டுவிட்டு வெளியில் வரும் மூர்த்தி கண்ணன் செய்த்தை நினைத்து பார்க்கிறான். அப்போது அங்கு வரும் ஜீவாவிடம் கதிர் எங்கே இருக்கான் கூட்டிட்டு வா என்று சொல்கிறான் மூர்த்தி.
ஜீவா கதிரை அழைத்து வந்ததும் மூர்த்த அவர்களிடம் என்மீது கோபமா என்று கேட்கிறான. அதற்கு கதிர் ஜீவா இருவரும் எதுக்கு என்று கேட்க, இன்னைக்கு கண்ணன் சாப்பிட வரும்போது எழுந்த்து குறித்து கேட்கிறான். அதற்கு ஜீவா உங்க மேல எதுவும் கோபம் இல்லனே அவன் பண்ணத நினைத்துதான் கோபம் என்று சொல்கிறான். அதற்கு மூர்த்தி அம்மா இறந்த துக்கம் அவனுக்கும் இருக்கும்ல அதனாலதான் வந்து வந்து நிக்கிறான். அவன ஏத்துக்கலாம்னு நினைக்கும்போது அவன் செய்த்து தான்டா கண்ணுக்குள்ள வந்து நிக்குது.
அவன் மட்டும் இப்படி செய்யாமல் இருந்திருந்தால் எல்லாரும் ஒரே வீட்ல் சந்தோஷமா இருந்துருக்கலாம் அம்மாவும் நம்ம கூட இருந்திருப்பாங்க என்று சொல்லிவிட்டு அழுகிறான் அதற்கு ஜீவா கதிர் இருவரும் ஆறுதல் சொல்கின்றனர். அப்போது மூர்த்தி எது நாடந்தாலும் நீங்க ரெண்டு பேரும் அண்ணனை விட்டு போய்டாதீங்கடா என்று சொல்கிறான். அதற்கு ஜீவா கதிர் இருவரும் உங்கள விட்டா எங்களுக்கு யாருனே இருக்கா நாங் எங்கேயும் போகமாட்டோம் என்று கைபிடித்துக்கொள்கின்றனர். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil