Pandian Stores Serial Today Episode Update : கல்யாணத்திற்கு கோவிலுக்கு வந்த கண்ணனிடம் ஐயர் பூ மற்றும் தாலி வாங்கி வர சொல்கிறார். இதற்காக கண்ணனும் அவனது நண்பனும் வெளியில் செல்கிறன்றனர். இதற்கிடையே தனம் வீட்டில் டென்ஷனாக நடந்துகொண்டிருக்கிறாள். கஸ்தூரி அவளை முறைத்துக்கொண்டிருக்கிறார். அடுத்து கண்ணனை தேடி வெளியில் வரும் ஜீவா கதிர் இருவரும் பேசிக்கொண்டே வருகின்றனர்.
அப்போது ஜீவா கஸ்தூரி என்னடா கண்ணன் மேல இப்படி ஒரு பழி போடுறாங்க என்று சொல்ல, அவங்க சொல்ற அளவுக்கெல்லாம் கண்ணன் இல்ல என்று கதிர் சொல்கிறான். அதற்கு ஜீவா ஆனா கண்ணனுக்கு ஐஸ்வர்யாவை ரொம்ப புடிச்சிருக்கு போலருக்குடா என்று சொல்ல, அது மட்டும் சரியா தெரியல என்று கதிர் சொல்கிறான். அவனுக்கு நம்ம முகத்த பாக்க ஒரு மாதிரி இருக்கும்டா, காலைல கூட அவன் என் முகத்த பார்த்தே பேசல என்று ஜீவா சொல்ல, அண்ணன் அடிச்சிட்டாருல அதான் என்று கதிர் சொல்கிறான்.
இதனையடுத்து வெளியில் வரும் கண்ணன், தெருமுனையிவ் பூக்கடை இல்லை என்பதை பார்த்து என்னடா இங்க கடை இல்ல, நான்வேற தெருமுனைல கடை இருக்கும்னு நெனச்சி வந்துட்டேன், ஐஸ்வர்யா வேற அங்க தனியா இருக்க என்று சொல்ல அவன் நண்பன் அவள் அங்க தனியாலாம் இல்ல அவ ப்ரண்ஸ் அப்பறம் நம்ம ப்ரன்ஸ் எல்லார் கூடவுந்தான் இருக்கா என்று சொல்கிறான். பிரஷாந்த இங்க நம்மல தேடி வந்துட்டான். அவன் நம்மல கண்டுபிடிக்கிறதுக்குள்ள எதாவது செய்யனும் இல்லனா பெரிய பிரச்சினையாகிடும் என்று கண்ணன் சொல்கிறான்.
இதற்கிடையே கண்ணன் ஐஸ்வர்யாவை தேடி சுற்றிக்கொண்டிருக்கும் பிரஷாந்த்க்கு கால் பண்ணும் மல்லி, ஐஸ்வர்யா கண்ணன் கூட சுத்துறானு ஏன் என்ட சொல்லல, இத முன்னாடியே சொல்லிருந்தா இந்த கல்யாணத்துக்கே சம்மதிச்சிருக்க மாட்டேன் என்று சொல்கிறாள். மேலும் உனக்கு என்னடா குறைச்சல் நீ எதுக்கு ஒருத்தி பின்னாடி தொங்கிக்கிட்டு போகனும் என்று கேட்கிறாள். ஆனால் பிரஷாந்த் அப்புறம் பேசுறேன் என்று சொல்லி கட் செய்கிறான்.
இதற்கிடையே கதிரும் ஜீவாவும். கண்ணன் நண்பனின் அம்மா மூலமாக அவன் இருக்கும் இடத்தை தெரிந்துகொண்டு அங்கு புறப்படுகின்றனர். அப்போது வெளியில் மாலை வங்க வந்த கண்ணனை பார்த்துவிடும் பிரஷாந்த், அவனை ஃபாலோ செய்கிறான். ஆனால் இடையில் ஒரு ஆட்டோ வந்து மோதியதால் அவர்களை மிஸ் செய்துவிட்டு பிறகு தவறான பாதையில் செல்கிறான். இதனையடுத்து தனம வீட்டிற்கு வரும் மல்லி இங்க என்ன நடக்குது என்று கேட்கிறாள்.
மேலும் கஸ்தூரி அத்தாச்சி சொல்றது உண்மையா என்று கேட்க, அதெல்லாம் இல்ல கண்ணன் கோவிச்சிக்கிட்டுதான் போய்ருக்கான் என்று தனம் சொல்கிறாள். அதற்கு கஸ்தூரி அவங்க சொல்றது உண்மை இல்லை கஸ்தூரி என்று சொல்கிறாள். இதற்கிடையெ தாலி மாலையுடன் கோவிலுக்கு வரும கண்ணன், அதை ஐயரிடம் கொடுக்கிறன். கல்யாண வேலைகள் நடக்கிறது. அப்போது தவறான பாதையில் சென்ற பிரஷாந்த் சரியாக கோவிலுக்கு அருகில் வர கண்ணன் ஐஸ்வர்யா இருவரும் மாலை மாற்றிக்கொள்கின்றனர்.
அப்போது கதிர் ஜீவா இருவரும் கோவிலுக்கு வருகின்றனர். இதன்பின்னர் கண்ணனிடம் ஐயர் தாலி எடுத்து கொடுக்க அதை வாங்கும் கண்ணன் தனது அண்ணன்கள் மற்றும் அண்ணியை நினைத்து பார்க்கிறான் அத்துடன் முடிகிறது இன்றைய எபிசோடு
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil