Pandian Stores Serial Kathir Mullai Couple : தொலைக்கட்சி சீரியலுக்கு தமிழகத்தில் எப்போதுமே அதிக வரவேற்பு உண்டு. இதில் ஒரு சில சீரியல்கள் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடிக்கும் அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தமிழக மக்களிடம் நீங்க இடம் பெற்றுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. கூட்டுக்குடும்பம் மற்றும் சகோதரர்களின் பாசப்பினைப்பை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த சீரியலில் நடிக்கும் ஒவ்வொரு கதாப்பாத்திரத்திற்கும் தனித்தனி ரசிகர் பட்டாளங்கள் உள்ளன.
இதில் நடித்து வரும் ஜீவா மீனா, தம்பதிக்கு ஏற்கனவே குழந்தை உள்ள நிலையில், மூர்த்தி தனம் தம்பதிக்கு விரைவில் குழந்தை பிறக்க உள்ளது. இதற்கு இடையில் உள்ள கதிர் முல்லை தம்பதி இடையில் ரொமான்ஸ் காட்சிகள் தொடங்கிய சமயத்தில் முல்லையாக நடித்து வந்த நடிகை சித்ரா திடீரென தற்கொலை செய்துகொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது அவருக்கு பதிலாக காவியா அறிவுமணி முல்லையாக நடித்து வருகிறார். பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வந்த இவர், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பிரபலமடைந்துள்ளார். ஆனால் இந்த சீரியலில் இவர்களுக்கு இடையில் இன்னும் ரொமான்ஸ் கட்சிகள் தொடங்கவில்லை.
இது தொடர்பாக கடந்த வாரம் பேசிய காவியா, வரும் நாட்களில் எங்களுக்கு இடையே ரொமானஸ் கட்சிகள் அதிகம் இருக்கும் என்றும், நான் இப்போதுதான் கதிரை மாமா என்று அழைக்க தொடங்கியுள்ளேன் என்று தெரிவித்திருந்தார். இதனால் இவர்களுக்கு இடையே எப்போது ரொமான்ஸ் கட்சிகள் தொடங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நிலையில், ரொமான்ஸ் கட்சிகளில் எப்படி நடிக்க வேண்டும் என்று நடிகை காவ்யா அறிவுமணி டிரெயினிங் எடுப்பது போல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அஜித், நயன்தாரா ஆர்யா நடிப்பில் வெளியான ஆரம்பம் படத்தில், இடம்பெற்ற என் பியூஸ் போச்சு பாடலில், பெண் குரலில் தொடங்கும் ''முடியாதுனு சொல்ல முடியலையே'' என்ற பாடலை ரீல் செய்து காவியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவில் பாடலுக்கு ஏற்றபடி அவர் செய்யும் அசைவுகள் ரொமான்ஸ் காட்சிகளுக்கு ஒத்திகை பார்ப்பது போல் உள்ளது. இந்த வீடியோ தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"