Pandian Stores Promo Update : விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கு முக்கிய காரணம் இந்த சீரியலின் கதைகளம் என்று கூறலாம். சகோதர பாசம் கூட்டுக்குடும்பத்தின் முக்கியத்துவம் என குடுபத்திற்கு தேவையான அனைத்து அம்சங்களும் நிறைந்துள்ள இந்த சீரியலில் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.
தந்தை இல்லாத வீடு, நோய்வாய் பட்ட அம்மா சிறுவயது தம்பிகள் என இருக்கும் குடும்பத்தில் மூத்த அண்ணன் மூர்த்தி தனது மனைவி தனத்துடன் பாசமாக தம்பிகளை வளர்க்கிறான். பின்னாளில் 2 தம்பிகளுக்கு ஒரே நாளில் திருமணம் நடக்கிறது. ஒற்றுமையாக இருக்கும் குடும்பத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு தனம் கர்ப்பமாகிறாள். இந்த நேரத்தில் பாண்யடின் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் கடைக்குட்டி கண்ணன் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்துகொள்கிறான.
இதனால் அதிர்ச்சியடையும் மூர்த்தி பாசமாக வளர்த்த தம்பியை வீட்டை விட்டே வெளியேற்றுகிறான். மகன் இப்படி செய்துவிட்டானே என்று மனத்திற்கு நினைத்து வருத்தப்படும் லக்ஷ்மி அம்மா ஒரு கட்டத்தில் மரணமடைகிறார். இதனால் சீரியலில் உள்ளவர்கள் மட்டுமல்லாது ரசிகர்களும் சோகக்கடலில் மூழ்கியுள்ளனர். ஆனால் வேலை காரணமாக வெளியூர் சென்ற கண்ணன் அம்மாவை பார்க்க வருவான என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மனதில் தொற்றிக்கொண்டுள்ளது. நேற்றைய எபிசோட்டில் கண்ணனுக்காக அனைவரும் காத்திருக்கும்போது நிறைவடைந்துவிட்டது.
தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் அடுத்த வாரத்திற்கான ப்ரமோ வெளியிடப்பட்ட்ள்ளது. இதில், ஊருக்கு திரும்பும் கண்ணன் அம்மா இறந்த்து குறித்து பொஸ்டரில் பார்க்கிறான். அதன்பிறகு ஐஸ்வர்யா அவனிடம் இது பற்றி கூறுகிறாள். இதனால் பதறிப் போய் ஓடி வருகிறான் கண்ணன். அதற்குள் லட்சுமியின் உடலை இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இதை அறிந்து அவசர அவசரமாக கண்ணன் ஓடி வர மூர்த்தி தனது அம்மாவின் உடலுக்கு தீ மூட்டுகிறான்
அப்போது இடுகாட்டிற்கு வரும் கண்ணன் அம்மாவின் முகத்தை கடைசியாக கூட பார்க்க முடியாததை நினைத்து, தரையில் விழுந்து கதறி அழுகிறான் அவனை அனைவரும் சமாதானம் செய்ய முயற்சித்தும், கண்ணன் அம்மாவை நினைத்து கதறி அழுகிறான் அத்துடன் இந்த ப்ரமோ முடிவடைகிறது. அம்மா இறந்த துக்கத்தில் உள்ள மூர்த்தி குடும்பத்தினர் கண்ணனை ஏற்றுக்கொள்வார்களா அம்மாவின் முகத்தை காண்பிக்காமல் இப்படி செய்துவிட்டார்களே என்று கண்ணன்தனது அண்ணன்கள் மீது கோபப்படுவானா கதையில் அடுத்து என்ன நடக்கும், என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
மேலும் இந்த பரமோவுக்கு ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். அதில் ஒரு ரசிகர் தனம் கர்ப்பமா இருக்கும்போது மூர்த்தி எப்படி என்று கேட்டுள்ளார். பார்க்கும் போது அழுகை வருகிறது அம்மாவின் பாசம் அதிக அளவு இருக்கிறது மறக்க முடியாத அனுபவம் என பதிவிட்டார். இந்த ப்ரமோவுக்கு ரசிகர்கள் பலரும் பாவம் கண்ணன் என்றே பதிவிட்டுள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil