scorecardresearch

வேண்டுதலில் தீவிரம் காட்டும் முல்லை… மயங்கி விழுந்ததால் கதிர் ஷாக்

Tamil Serial Update : அக்காவுக்குதான் குழந்தை இல்லை எனக்கும் குழந்தை இல்லை என்றால் எப்படி அப்பா

வேண்டுதலில் தீவிரம் காட்டும் முல்லை… மயங்கி விழுந்ததால் கதிர் ஷாக்

Tamil Serial Rating Pandian Stores Update : பாண்டியன் ஸ்டோர்ஸ் நீங்களும் பக்திக்கு உள்ள புகுந்துட்டீங்களா சூப்பர் சூப்பர் அப்படியே எல்லா சீரியலையும் கோவில்ல இணைத்து ஒரு மகா சங்கமத்தை போடுங்க சூப்பரா இருக்கும் என்று சொல்ல வைத்துள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ்.

சகோதர ஒற்றுமை, கூட்டுக்குடும்பம் உள்ளிட்ட இன்றியமையாத தேவைகளை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது ஒற்றுமையும் இல்லை கூட்டு குடும்பமாக இருந்தாலும் அனைவரும் தனித்தனியாகவே இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் முல்லைக்கு குழந்தை பிறக்காது என்று தெரிய வந்ததில் இருந்து குடும்பத்தில் உள்ள அனைவருமே ஒருவருக்கு தெரியாமலட ஒருவர் புரளி பேச தொடங்கிவிட்டனர். அங்கு ஒரு பக்கம் முல்லைக்கு ட்ரீட்மெண்ட் பார்க்க வேண்டும் என்பதற்காக மூர்த்தி வீட்டை விற்காமல் வீடு கட்டும் ப்ளானை தள்ளி வைத்துள்ளார்.

ஆனால் இங்கு கஸ்தூரி பேச்சை கேட்டுக்கொண்டு முல்லை குழந்தை வரம் கேட்டு கோவில் கோவிலாக அலைந்துகொண்டிருக்கிறார். மறுபுறம் வீடு கட்டும் ப்ளானை ட்ராப் செய்தது மீனாவுக்கு கோவம். இதில் இதில் கடைகளில் உள்ள வேலைகளை எல்லாம் இழுத்துப்போட்டு செய்து வரும் ஐஸ்வர்யா என்ன கேரக்டர் என்று கண்டுபிடிக்கவே முடியவில்லை.

வீட்டுக்கு வந்த புதிதில் யார் பேச்சையும் கேட்காமல் இருந்தார். அடுத்து வீட்டு வேலைகளை செய்யும்போது மீனாவுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் பலமுறை சண்டை வந்துள்ளது. ஆனால் இப்போ வீடு கட்டும் ப்ளான் ட்ராப் ஆனதில் இருந்து ஐஸ்வர்யாவும் மீனாவும் கலந்து பேசிக்கொள்கின்றனர். இதில் ஐஸ்வர்யா மீனாவுக்கும் சப்போர்ட் பண்ணுகிறார். அதே சமயம் வீட்டுக்கும் சப்போர்ட்டாக இருக்கிறார். .

தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில் முல்லை வேண்டுதலை நிறைவேற்றினாலும், மயங்கி கோவிலில் விழுந்துவிட்டார். அதன்பிறகு கதிர் அவளுக்கு தண்ணீர் கொடுத்து வீட்டிற்கு அழைத்து வருகிறார். ஆனாலும் முல்லையால் நடக்க முடியவில்லை. அதன்பிறகு முல்லையை தூக்கிக்கொண்டு உள்ளே செல்கிறார் கதிர். அடுத்து வேண்டுதல் குறித்து கேட்கிறார் தனம். அதன்பிறகு முல்லையின் அப்பா எதுக்குமா இப்படி பண்ற என்று கேட்க, அக்காவுக்குதான் குழந்தை இல்லை எனக்கும் குழந்தை இல்லை என்றால் எப்படி அப்பா என்று  கேட்க அத்துடன் ப்ரமோ முடிவடைகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial pandian stores rating update with promo