சின்னத்திரையின் முக்கிய சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் 1-ந் தேதி முதல் தொடங்கப்பட்ட இந்த சீரியல் தற்போது 5 வருடங்களை கடந்து வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது. ஸ்டாலின் முத்து, சுஜிதா தனுஷ், ஹேமா ராஜ்குமார், வெங்கட், குமரன், லாவண்யா, விஜே தீபிகா, சரவண விக்ரம் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சகோதர பாசம், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, கூட்டுக்குடும்பம் உள்ளிட்ட பல முக்கிய தேவைகளை வலியுறுத்தி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் அவ்வப்போது சலிப்பை ஏற்படுத்தினாலும், அதற்கு ஈடு செய்யும் விதமாக அடுத்த வாரத்தில் விறுவிறுப்பான காட்சிகளை வைத்து ரசிகர்கள் மத்தியில எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுவார்கள். இதனிடையே கடந்த 5 வருடமாக ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியானது.
ஜனார்த்தன் தனது சின்ன மாப்பிள்ளையிடம் கத்திக்குத்து வாங்கிக்கொண்டு தனது தவறை உணர்ந்து ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகிறது. ஏறக்குறைய சீரியலின் வில்லன்கள் அனைவரும் தற்போது திருந்திவிட்ட நிலையில், இன்னும் பிரஷாந்த் மட்டும் போலீஸில் மாட்டிக்கொண்டால் சீரியல் முடிவுக்கு வந்துவிடும் என்று கூறப்படுகிறது. அநேகமாக இந்த காட்சிகள் அடுத்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிந்தவுடன் உடனடியாக அந்த சீரியலின் 2-வது சீசன் தொடங்க உள்ளது. இது தொடர்பான ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் மூர்த்தியா ஸ்டாலின் முத்துவே நடிக்க தனமாக நடிகை நிரோஷா நடித்துள்ளார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மூர்த்திக்கு 3 தம்பிகள் இருந்தார்கள். தற்போது சீசன் 2-ல் அவருக்கு 3 மகன்கள் இருக்கிறார்கள். இவர்கள் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் தான் கதையாக இருக்கும் என்று எதிர்பார்ப்படுகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் Season 2 - விரைவில்.. #PandianStores2 #VijayTV #VijayTelevision #Pandianstoresseason2 #Pandianstores pic.twitter.com/2l5EgjXNFU
— Vijay Television (@vijaytelevision) October 14, 2023
தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில் நிரோஷா சுப்பிரபாதம் ஒலிக்க வந்துகொண்டிருக்கிறார். அப்போது மகன்கள் தூங்கிக்கொண்டிருக்க தீபாவளியும் அதுவுமா தூங்கிட்டு இருக்காதீங்கடா எழுந்திருங்க என்று சொல்ல, இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிக்கிறோம் என்று பசங்க சொல்கிறார்கள். ஆனால் நிரோஷா அப்பா வருகிறார் என்று சொன்னவுடன் அனைவரும் எழுந்து ஓடுகின்றனர். அடுத்து மூர்த்தி புள்ளைங்களை வளர்த்தா என்னை மாதிரி வளக்கனும் என்று சொல்ல ப்ரமோ முடிவடைகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.